Ulundhu Puttu: கருப்பு உளுந்து, அரிசி இருந்தால் போதும்! ஆரோக்கியம் நிறைந்த சுவையான புட்டு ரெடி!

Published : Oct 15, 2026, 05:30 PM IST

Ulundhu Puttu: கருப்பு உளுந்து புட்டு செய்வது எப்படி? கருப்பு உளுந்து, அரிசி, தேங்காய் சேர்த்து சுவையான புட்டு தயாரிக்கத் தேவையான பொருட்கள், எளிய செய்முறை மற்றும் சமையல் குறிப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
17
கருப்பு உளுந்து புட்டு

வழக்கமாக அரிசி மாவில் புட்டு செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், கருப்பு உளுந்தில் சத்தான புட்டு செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? உடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்க உதவும் கருப்பு உளுந்தை வைத்து, வீட்டிலேயே எளிமையாகவும் சுவையாகவும் இந்தப் பாரம்பரிய உணவைத் தயாரிக்கலாம்.

குறிப்பாக, இனிப்பு சுவையுடன் தேங்காயின் மணமும் கலந்து கிடைக்கும் இந்தக் கருப்பு உளுந்து புட்டு, காலை உணவாகவோ மாலை நேரச் சிற்றுண்டியாகவோ சாப்பிட ஏற்றது.

கடைகளில் கிடைக்கும் தின்பண்டங்களைத் தவிர்த்து, வீட்டிலேயே ஆரோக்கியமான உணவைத் தயாரிக்க விரும்புபவர்கள் இந்த முறையில் கருப்பு உளுந்து புட்டு செய்து பாருங்கள்.

காலை உணவாகவோ, மாலை நேரச் சிற்றுண்டியாகவோ சாப்பிட ஏற்ற இந்தக் கருப்பு உளுந்து பூட்டை வீட்டிலேயே எளிமையாகச் செய்யலாம். அப்படியென்றால், இதற்குத் தேவையான பொருள்கள் என்னென்ன, பக்குவமாகச் செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்

  • கருப்பு உளுந்து - 1 கப்
  • பச்சரிசி - 1 கப்
  • துருவிய தேங்காய் - ½ கப்
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - மாவைப் பதப்படுத்தத் தேவையான அளவு
  • ஏலக்காய்த் தூள் - விருப்பப்பட்டால் சிறிதளவு
  • வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - இனிப்பாகச் செய்ய விரும்பினால் தேவையான அளவு
27
கருப்பு உளுந்து பூட்டு செய்முறை - படி 1

கருப்பு உளுந்தை வறுக்கவும்

கருப்பு உளுந்தைச் சுத்தம் செய்து, ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பச்சை வாசனை நீங்கி நல்ல மணம் வரும் வரை வறுத்து ஆறவிடவும். உளுந்து கருகிவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

அரிசியை வறுக்கவும்

அதேபோல் பச்சரிசியையும் தனியாக வாணலியில் போட்டு ஈரப்பதம் நீங்கும் வரை வறுக்கவும். பின்னர் முழுமையாக ஆறவிடவும்.

37
படி 2

மாவாக அரைக்கவும்

ஆறிய அரிசி மற்றும் கருப்பு உளுந்தைத் தனித்தனியாக மிக்சியில் போட்டு, மிகவும் நைசாக இல்லாமல் சற்று மாவுப் பதத்தில் அரைத்துக்கொள்ளவும். பின்னர் இரண்டையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்க்கவும்.

47
படி 3

மாவைப் பதப்படுத்தவும்

மாவில் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்துக் கலந்து கொள்ளவும். மாவை விரல்களால் பிடித்தால் ஒன்றாகச் சேர்ந்து, தொட்டால் உதிரும் அளவுக்குப் பதம் இருக்க வேண்டும். அதிகத் தண்ணீர் சேர்த்தால் மாவு கட்டியாகிவிடும்.

57
படி 4

தேங்காய் சேர்க்கவும்

தயாரித்த கருப்பு உளுந்து, அரிசி மாவுடன் துருவிய தேங்காயைச் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு ஏலக்காய்த் தூள் சேர்க்கலாம். மேலும், நாட்டுச் சர்க்கரை அல்லது துருவிய வெல்லத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். இதோடு முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறவும்.

67
படி 5

ஆவியில் வேகவைக்கவும்

இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தயாரித்து வைத்துள்ள புட்டு மாவை இட்லித் தட்டில் வைத்து சுமார் 10-15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்ளோதான் சுவையான கருப்பு உளுந்து பூட்டு தயார். தேவைக்கேற்ப தேங்காய் சேர்த்து சூடாகப் பரிமாறலாம்.

77
படி 6

கருப்பு உளுந்து புட்டு சுவையாக வர சில குறிப்புகள்

உளுந்தைச் சரியாக வறுக்கவும்: குறைந்த தீயில் வறுத்தால் பச்சை வாசனை நீங்கி நல்ல மணம் கிடைக்கும்.

மாவை அதிகம் நனைக்க வேண்டாம்: தண்ணீரைத் தெளித்துத் தெளித்து கலக்க வேண்டும்.

மாவைச் சலித்துக்கொள்ளவும்: மாவில் பெரிய கட்டிகள் இருந்தால் ஆவியில் வேகும்போது சீராக வேகாமல் போகலாம்.

தேங்காயைச் சேர்க்கவும்: தேங்காய் சேர்ப்பதால் சுவையும் மென்மையும் அதிகரிக்கும்.

நன்றாக வேகவைக்கவும்: உளுந்து மற்றும் அரிசி மாவு முழுமையாக வேகியிருப்பதை உறுதிசெய்யவும்.

அரிசியும் கருப்பு உளுந்தும் சேர்த்து ஆவியில் வேகவைக்கும் இந்தப் பாரம்பரிய புட்டை, வீட்டிலேயே எளிய பொருள்களைக் கொண்டு தயாரிக்கலாம். மாவின் ஈரப்பதத்தையும் வேகும் நேரத்தையும் சரியாகக் கவனித்தால் உதிரியாகவும் சுவையாகவும் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories