முட்டையின் மஞ்சள் கரு, சால்மன் மற்றும் மத்தி மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், DHA மாதிரியான கொழுப்புகள் உள்ளன. நம் மூளை இந்தக் கொழுப்புகளால்தான் உருவாகியுள்ளது. இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கண் பார்வையைப் பாதுகாத்து, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. இந்த சூப்பர் உணவுகள் மூளை மற்றும் நரம்பு செல்களை உருவாக்கி, கற்கும் திறனையும் ஞாபக சக்தியையும் அதிகமாக்குகின்றன. இந்த உணவுகளை குறைவாக உட்கொண்டால், அது ஞாபக மறதிக்கும், சில நேரங்களில் மன அழுத்தத்திற்கும் காரணமாக அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் ஏ, பி, ஈ, கே, சி மற்றும் பீட்டா கரோட்டின், ஃபோலேட் எல்லாம் மூளை வளர்ச்சிக்கு ரொம்பவே உதவுகிறது. இதில் கொழுப்பு குறைவாக இருப்பதால், அனைத்து சத்துக்களையும் உடல் எளிதில் உறிஞ்சிக்கொள்ள உதவும். குறிப்பா, கீரைகளில் உள்ள ஃபோலேட் சத்து வளரும் குழந்தைகளின் மூளையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.