பெரும்பாலான இல்லத்தரசிகள் வீட்டில் மீதமாகும் உணவை உண்பவர்களாக உள்ளனர். சிலர் விருப்பமான உணவை மட்டும் உண்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உணவு பசியை போக்கும் பொருள் மட்டுமில்லை, ஆரோக்கியம் அளிப்பதும் தான். பெண்கள் உண்ணும் சில உணவுகள் அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கும். எந்தெந்த உணவுகள் பெண்களின் அந்தரங்க உறுப்பின் ஆரோக்கியத்தில் வினையாற்றுகிறது என்பதை இங்கு காணலாம்.
ஸ்சுவீட்ஸ்!
சாப்பிட்ட பின் இனிப்பு வகையில் ஏதேனும் உண்ணும் பழக்கம் பலருக்கு உள்ளது. பெண்கள் இனிப்புகளை உண்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். உடலில் சர்க்கரை அளவு உயர்வதால், பெண்களுக்கு பிறப்புறுப்பு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சர்க்கரை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது.
வெங்காயம்
வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்தால் அந்தரங்க உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படுவது போல், அந்தரங்க உறுப்பு பிரச்சனையும் அதிகரிக்கும். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க, வெங்காயத்தின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்கவும்.
வறுத்த உணவுகள்!
சிப்ஸ், பிரைடு ரைஸ், பிரைடு நூடுல்ஸ் ஆகிய வறுத்த உணவுகளை உண்ணும்போது கவனமாக இருக்க வேண்டும். பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பு, பெண்களுக்கு பாக்டீரியா வஜினோசிஸ் பிரச்சனையை ஏற்படுத்தும். குறைந்த அளவில் உண்ணலாம்.