தினமும் எலும்பு சூப் அருந்துவதால் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதிலும், செரிமான மேம்பாடு, மூட்டு ஆரோக்கியம் ஆகியவற்றை பராமரிப்பதிலும் எலும்பு சூப் அரும்பங்காற்றுகிறது. பருவ காலம் மாறும்போது சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது போன்ற தோல் பராமரிப்பு விஷயங்களில் எலும்பு சூப் நல்ல பலன் தருகிறது. ஆடு, கோழி, வான்கோழி, நண்டு இவற்றில் எதை கொண்டும் எலும்பு சூப் தயார் செய்யலாம்.