இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதால் இஸ்லாமியர்களின் அனைவரது வீடுகளிலும் மணக்க மணக்க பிரியாணியும் மற்ற பிற அசைவ உணவுகளையும் செய்து அவர்களும், அவர்களது உற்றார் , உறவினர் ,நண்பர்கள், விருந்தினர்கள் என்று அனைவருக்கும் செய்து கொடுத்து அனைவரும் ஒன்று கூடி சாப்பிடுவார்கள்.
இந்த திருநாளில் பெரும்பா ன்மையானோர் மட்டன் பிரியாணி தான் செய்து கொண்டாடுவார்கள் . மட்டனில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை கொண்டவர்கள் பிரியாணியை சாப்பிட கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள்.
ஆனால் மட்டன் பிரியாணியை சாப்பிட்டு விட்டு இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு மேலும் அதிகமாக்காமல் இந்த பானங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டாலே போதும் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிப்பதைத் தடுக்க முடியும்.
அப்படி கொலஸ்ட்ராலை அதிக படுத்தாமல் இருக்க பிரியாணி சாப்பிட்ட பிறகு அருந்த வேண்டிய பானங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
க்ரீன் டீ
க்ரீன் டீ எடுத்துக் கொள்வதால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொலஸட்ராலைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு காரணம் க்ரீன் டீயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் . இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதால் ஒருவரை இலகுவாகவும், சுறுசுறுப்பாகவும் உணர செய்கிறது. ஆகையால் பிரியாணி சாப்பிட்டு கொலஸ்ட்ரால் உடலில் ஏறிவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் இந்த க்ரீன் டீயைக் மாலை நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சையில் காணப்படும் வைட்டமின் சி உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க துணை புரிகிறது. அப்படியான எலுமிச்சை சாறினை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, சிறிது தேன் விட்டு கலந்து குடித்தால், அது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். அதோடு கொலஸ்ட்ரால் சேர்வதையும் தடுக்கும். இந்த பானத்தை பிரியாணி சாப்பிட்ட 1 மணி நேரத்தில் குடித்தால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு குடிப்பதால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
மல்லி நீர்
தனியா விதைகளள் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் தன்மை பெற்றது. ஆகையால் பிரியாணி சாப்பிட்ட பின் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க கூடாது என்று விரும்புபவர்கள் 1 க்ளாஸ் தண்ணீரில் சிறிது தனியா விதைகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி, மிதமான சூட்டில் இருக்கும் போது சிறிது தேன் கலந்து குடித்தால் நன்மை பயக்கும்.
மஞ்சள் நீர்:
மஞ்சள் இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புக்களை கரைக்க துணை புரிகிறது. ஆகையால் மஞ்சள் தூளை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்தால் ,உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுக்க முடியும். இந்த மஞ்சள் நீர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கொண்டவர்களுக்கு இது ஒரு அரு மருந்தாகும்.
சுடுநீர்:
பிரியாணி சாப்பிட்ட பிறகு கொலஸ்ட்ரால் அதிகம் சேராமல் தடுக்க 1 க்ளாஸ் தண்ணீரை குடித்தால் மிகவும் நன்று. இவ்வாறு குடிப்பதால் உடலில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலில் சேர விடாமல் வெளியேற்றுகிறது.
அதோடு சுடுநீரானது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து செய்கிறது. வேறு எதையும் குடிக்க விரும்பாதவர்கள், ஒரு டம்ளர் கொதிக்கும் சுடுநீரைக் குடித்தாலே போதுமானது
டின்னருக்கு இப்படி கைமா வெஜ் சப்பாத்தி செய்ங்க! எவ்ளோ செய்தாலும் டக்குனு எல்லாமே காலி ஆகி விடும் !