முருங்கைக்காய் நம் நாட்டை பூர்வீகமாகக் கொண்டது. ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதன் இலை மற்றும் பூவிலும் மருத்துவ பயன்கள் உள்ளன. முருங்கையில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. முருங்கைக்காயை உணவிலும் பயன்படுத்தி சாப்பிடுவது உண்டு.
அந்தவகையில், முருங்கைக்காயை
கஷாயமாக செய்து குடித்தால் உடல் எடை குறையும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் உள்ளன. அவை உடல் எடையைக் குறைக்கவும், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.