தாய்ப்பால் அதிகமாக சுரக்க பெண்கள் பால் ரொம்ப குடிக்க வேண்டுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

First Published | Jun 12, 2023, 5:14 PM IST

புதிய தாய்மார்களுக்கு நிறைய அறிவுரைகள் சொல்லப்படும். அதில் ஒன்று தான், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க அதிக பால் குடிக்க வேண்டும் என சொல்வதும். உண்மையில் அதிகம் பால் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்குமா? நிபுணர்களிடம் கேட்போம்.  

தாய்மை அழகான உணர்வு. ஒரு பெண் தாயாகும் போது எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்துவிடுவாள். ஆனால் இதனிடையே அவளுக்கு கர்ப்ப காலம் முதல் பிரசவம் வரையும் பல்வேறு வகையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலம் பிரசவம், அதன் பின்னரும் வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கும். அதனால் புதிய தாய்மார்கள் யாருடைய அறிவுரையையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.

breast feeding

தாய்ப்பால் பற்றி பல விஷயங்கள் கூறப்படுகின்றன. அந்த வரிசையில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க அதிக பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்படி பால் குடிப்பதால் தாய்ப்பால் நன்றாக சுரக்குமா? நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க பிரசவித்த தாய் அதிக பால் குடிக்க வேண்டிய அவசியமில்லை. பால் ஒரு முழுமையான உணவு. இது உடலுக்கு ஆரோக்கியமானது. இதன் காரணமாக நீங்கள் பால் குடிக்கலாம். பாலில் கால்சியம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. தாய்ப்பாலை அதிகரிக்க இதை குடிப்பதில் எந்த பயனும் இல்லை. தாய்ப்பால் கொடுப்பது உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவளிக்கிறீர்கள் என்பதில் நேரடியாக தொடர்புடையது. உங்கள் குழந்தை எவ்வளவு பசியோடு இருக்கிறதோ, அதற்கேற்ப உங்கள் தாய்ப்பாலின் சப்ளை அதிகரிக்கும். உங்கள் மார்பகத்தில் சுரக்கும் பால் உங்களுடைய உடல் நிலையை சார்ந்தது.  

தாய்ப்பால் கொடுக்கும் போது, ​​ஒரு தாய் தனது உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் தாய் எதை சாப்பிட்டாலும் அது குழந்தையை நேரடியாக பாதிக்கும். தண்ணீர், தேங்காய் தண்ணீர், பழச்சாறு அல்லது பிற ஆரோக்கியமான பானங்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: மஞ்சளை தெரியாம கூட இவங்க ரொம்ப பயன்படுத்தக்கூடாது... உடலுக்கு இவ்ளோ பாதிப்பு இருக்குது!!

பொதுவாக பாலூட்டும் தாய் ஆரோக்கியமான உணவுத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். அது உங்கள் உடல் வகைக்கும் ஏற்ப இருக்கும். இதற்காக ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறலாம். பச்சை இலைக் காய்கறிகள், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், நீண்ட நேரம் பசியுடன் இருப்பதை தவிர்க்கவும். 

இதையும் படிங்க: உணவு மீதமாகும்போது அதை பிளாஸ்டிக் டப்பாவில் சேமிச்சு வைக்குறீங்களா? அதனால புற்றுநோய் வர வாய்ப்பிருக்காம்!!

Latest Videos

click me!