மஞ்சள் சமையலறையில் தவிர்க்கவே முடியாத மசாலா பொருள். அதுமட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பல நற்குணங்களும் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கும். பல காய்கறிகள் மஞ்சள் இல்லாமல் சமைத்தால் நிறமாற்றம் அடையும். மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக, பல சுகாதார நிபுணர்கள் இதை தொடர்ந்து சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஆனால் இந்த மசாலா அனைவருக்கும் பயனுள்ளதாக இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாங்க. மஞ்சளை சிலர் அதிகமாக எடுத்து கொள்ளவே கூடாது. அது யார் யார் என்பதை இங்கு காணலாம்.
நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் மஞ்சளை அதிகம் சேர்க்கக்கூடாது.
நீரிழிவு நோயாளிகள்:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை அதிகமாக உட்கொண்டால், அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவு கணிசமாகக் குறையும், இது உடலுக்கு நல்லதல்ல. அளவாக சேர்ப்பது நல்லது.
மஞ்சள் காமாலை:
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மஞ்சள் உண்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நீங்கள் அதிகளவில் மஞ்சள் சாப்பிட விரும்பினால், அதற்கு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. இல்லையென்றால் உங்கள் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது.