குழந்தைகள் பாலுடன் இந்த பழத்தை கலந்து வெறும் 10 நாட்கள் குடித்தால் மூளை அபார வளர்ச்சி அடையும்.. ட்ரை பண்ணுங்க!

First Published | Jun 9, 2023, 7:50 AM IST

அத்திப்பழத்தை பாலில் கலந்து உண்பதால் பல நன்மைகள் கிடைக்கும். அத்திப்பழம் கலந்த பாலை எப்படி தயாரிக்க வேண்டும்? வாங்க பார்க்கலாம். 

அத்திப்பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் கே, நார்ச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்களும் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் ஆகிய கனிம தாதுக்களும் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படும் அத்திப்பழம் மிகவும் ஆரோக்கியமான உலர் பழமாகும். நீரிழிவு நோயாளிகள் இந்த அத்திப்பழங்களை உட்கொள்வது மிகவும் நல்ல பலனளிக்கும். குழந்தைகளுக்கும் இது நல்ல பலனளிக்கும். அத்திப்பழத்தை எப்படி பாலுடன் சேர்த்து உண்பது? அதை எப்படி தயாரிப்பது என்பதை இங்கு காணலாம். 

அத்திப்பழம் தயாரிக்கும் முறை: 

அத்திப்பழம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம், செரிமான அமைப்பும் வலுவாக இருக்கும். உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. இது எடை இழப்புக்கும் உதவுகிறது. 

Latest Videos


அத்திப்பழம் தயாரிக்க தேவையான பொருட்கள்: 

1. ஒரு டம்ளர் பால்

2. உலர்ந்த அத்திப்பழங்கள் - 3 

3. முதல் 3 குங்குமப்பூ 

4. தேன் (விரும்பினால்) 

அத்தி பால் செய்வது எப்படி?

அத்திப்பழம் பால் தயாரிக்க, முதலில், ஒரு வாணலியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டம்ளர் பாலை நன்றாக கொதிக்க வைக்கவும். இதனுடன் 3 உலர்ந்த அத்திப்பழங்களை போட்டுவிடுங்கள். இதனை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் பாலில் வேகவைத்த அத்திப்பழத்தை நன்றாக மசித்து விடுங்கள். நீங்கள் பாலில் தேன் சேர்க்க விரும்பினால் சேர்க்கவும். இதனை சூடாக குடிக்கலாம். 

இதையும் படிங்க: இந்த பச்சை இலைகளை தினமும் சாப்பிட்டால் 60 வயசானாலும் நோய் உடம்புல ஒரு வலி இருக்காது!!

அத்திப்பழத்தின் நன்மைகள்: 

*அத்திப்பால் குடித்தால் நல்ல தூக்கம் வரும். 

*அத்திப்பால் உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

*அத்திப்பால் செரிமானம் மண்டலத்தையும், வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

*அத்திப்பால் குடித்தால் மூட்டு மற்றும் தசை வலியைக் குறையும். 

*அத்திப் பால் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

*மலச்சிக்கல் அல்லது இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்திப்பால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக குடிக்க வேண்டிய மற்றும் மறந்தும் தொடக்கூடாத பானங்கள் என்னென்ன தெரியுமா?

click me!