குடைமிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, கரோட்டினாய்டுகள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. குடைமிளகாயில் வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் உள்ளது. இது ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்க உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. குடைமிளகாயில் எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதை கோடையில் சாப்பிட்டால் உடல் நீரேற்றமாக இருக்கும். இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.