டயட்ல இருக்கீங்களா? ஒரு நாளில் எவ்வளவு சப்பாத்தி அல்லது அரசி சாப்பிடனும் தெரியுமா?

First Published | May 30, 2023, 4:07 PM IST

நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு சப்பாத்தி அல்லது அரிசியை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? இதுகுறித்து இப்பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க...
 

சாதம் மற்றும் சப்பாத்தி நமது இந்திய உணவில் பிரிக்க முடியாத உணவாகும். இவை இல்லாமல் எந்த உணவும்  முழுமை அடையாது. ஆனால் எடை இழப்பு என்று வரும்போது நாம் இந்த இரண்டு உணவுகளை குறைந்தளவு உட்கொள்வது அல்லது முற்றிலுமாக தவிர்கிறோம். காரணம் இவற்றில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டும், குறைந்தளவில்  புரதம் உள்ளது. உடல் எடை குறைப்பதற்கு புரதம் அதிக அளவு உட்கொள்வது அவசியம். மேலும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகளையும் சாப்பிட வேண்டும். இதனால் இந்த இரண்டு முக்கிய உணவுகளை  கைவிடுவது கட்டாயம் இல்லை. அதற்கு மாறாக இந்த உணவுகளை உண்ணும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள்

சப்பாத்தி: நம் நம் உடலுக்கு தேவையான பல்வேறு நுண்ணூட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் நார்ச் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. ஆறு அங்குலம் சப்பாத்தியில் 15 கார்ப்ஸ், 3 கிராம் புரதம், 0.4 கிராம் கொழுப்பு மற்றும் 71 கலோரிகள் உள்ளன

அரிசி: 1/3 அரிசியில் 80/ கலோரிகள், 1 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு மற்றும் 18 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

Latest Videos


அரிசி மற்றும் சப்பாத்தி:

அரிசி மற்றும் சப்பாத்தி இரண்டிலும் ஃப்லேட் உள்ளது. இரண்டிலும் இரும்பு சத்து ஒரே அளவு உள்ளது. சப்பாத்தியுடன் ஒப்பிடும் போது அரிசியில் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் குறைவாக உள்ளது. பாஸ்பர சிறுநீரகத்திற்கு முக்கியமானது மற்றும் செல்களை சரி செய்ய உதவுகிறது. ரத்த சிவப்பணுக்களை உருவாக்க இரும்பு தேவைப்படுகிறது மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. 

உடல் எடையை குறைக்க எது சிறந்தது?

தற்போது மக்கள் உடல் எடையை குறைக்க சப்பாத்தியை விட அரிசியை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அரிசி வெள்ளையாக இருக்கிறது. ஏனெனில் அது பாலிஷ் செய்யப்படுகிறது. இது உடலுக்கு கேடு. இதில் குறைவான சத்துக்கள் உள்ளது மற்றும் சர்க்கரைப் போல் செயல்படுகிறது. ஒருவேளை நீங்கள் அரிசி சாப்பிட விரும்பினால் பிரவுன் ரைஸ் சாப்பிட முயற்சிக்கவும். 

உடல் எடையை குறைக்க ஒரு நாளைக்கு எத்தனை கார்போஹைட்ரேட்களை  உட்கொள்ள வேண்டும்?

கார்போஹைட்ரேட்கள் உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலிக் 45 முதல் 65 சதவிகிதத்தை வழங்குகிறது. உங்கள் உணவில் 2000 கலோரிகள் இருந்தால் ஒவ்வொரு நாளும் 225 முதல் 235 வரை கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்கள் எடையை சீக்கிரமாக குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் 50 முதல் 150 வரை உள்ள கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
 

ஒரு நாளைக்கு எவ்வளவு சப்பாத்தி மற்றும் சாதம் சாப்பிட வேண்டும்?

நீங்கள் உங்கள் உடல் எடையை குறைப்பதற்காக மதிய உணவில் இரண்டு சப்பாத்தியும், ஒரு கிண்ணம் அளவு சாதம் சாப்பிட வேண்டும். மேகும் இரவில் சாதம் சாப்பிடுவதை தவிர்க்கவும். 

இதையும் படிங்க: மோமோஸ் சாப்பிடணும்னு நினைக்கிறீங்களா? அப்போ மருத்துவமனைக்கு செல்ல ரெடியா இருங்க..!!

சப்பாத்தி மற்றும் அரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. நீங்கள் உடல் எடையை குறைப்பதற்காக சப்பாத்தி சாப்பிட விரும்பினால் சாதாரண கோதுமைக்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் கொண்ட சப்பாத்தியை சாப்பிடுங்கள். அவை கார்போஹைட்ரேட்டுகளை குறைக்க உதவும்.

click me!