Health Tips: மறந்தும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?

First Published Jun 1, 2023, 2:39 PM IST

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும். உணவே மருந்து என்றாலும் சில உணவுகள் நம்முடைய உடல் நலத்தை பாதிக்கின்றன. 

எப்போதும் சத்துள்ள உணவுகளை உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். பழைய உணவுகளை உண்ணபதை தவிர்க்க வேண்டும். இரவில் மிஞ்சிய உணவை காலையில் சாப்பிட வேண்டிய சூழல் வரும். இப்படி மீதமான பிறகு எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதை இங்கே காணலாம் .

முட்டையை எப்போது உண்ணக் கூடாது? 

முட்டைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கெட்டு போன முட்டையை தவிர்க்க வேண்டும். கெட்டு போன முட்டைகளில் உள்ள சால்மோனெல்லா பாக்டீரியா சமைத்த பிறகு மற்ற வகை பாக்டீரியாக்களை விரைவாக உருவாக்குகிறது. இது கடுமையான வயிற்று நோய்களை ஏற்படுத்துகிறது. எனவே, காலாவதியான முட்டைகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். முட்டையை அவித்து சில மணி நேரங்களுக்குள் சாப்பிடுவதும் அவசியம். 

பீட்ரூட்: 

பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைடு நிறைந்துள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் பீட்ரூட்டை சமைத்த பிறகு, இந்த கலவைகள் நைட்ரைட்டாகவும் பின்னர் நைட்ரோசமைனாகவும் மாறும். இவற்றில் சில புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை. அதனால்தான் பீட்ரூட் உணவுகளை சமைத்த நீண்ட நேரத்திற்கு பிறகு தவிர்க்க வேண்டும். கெட்டு போன பீட்ரூட் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். 

சிக்கன்:  

உங்களுக்கு சிக்கன் சாப்பிடுவதில் விருப்பம் இருந்தால், அதை ப்ரெஷாக மட்டும் சமைத்து சாப்பிடுங்கள். முந்தைய நாள் சமைத்த சிக்கனை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது நல்லதல்ல. கோழிக்கறியில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உள்ளது. இது சமைத்த பிறகு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளரும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. 

இதையும் படிங்க: Ration kadai palm oil:ரேஷன் கடை பாமாயிலில் இருக்கும் அதிகப்படியான பித்தத்தை ஈஸியா வெளியே எடுக்க சூப்பர் டிப்ஸ்

பழைய உணவை உண்ணும் முன்பாக அதனுடைய வாசனையை அறிய வேண்டும். அதில் வித்தியாசமான வாசனை வந்தால் சாப்பிடக் கூடாது. சில உணவு பொருட்கள் சிறிது நேரம் வைத்திருந்தாலே பழையதாகிவிடும். அவற்றை உட்கொள்ளக்கூடாது.  

இதையும் படிங்க: கிரீன் டீ குடிக்கிறப்ப இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!! அப்புறம் நன்மைக்கு பதிலா உடம்புக்கு பாதிப்பு வரும்!!

click me!