முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?

Published : Nov 01, 2026, 02:45 PM IST

Eggs: முட்டையில் ஏகப்பட்ட சத்துகள் நிறைந்துள்ளன. ஆனால் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஆபத்து உள்ளதா? ஆய்வுகள் சொல்வது என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
14
தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா?

"தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் போகத் தேவையில்லை" என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவுக்கு ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்துள்ளன. அதேபோல், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடம்புக்கு மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால்தான், டயட்டில் இருப்பவர்களின் தட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் ஒரு முட்டையும் கண்டிப்பாக இருக்கும்.

ஜிம்முக்குப் போகிறவர்களும், வொர்க்-அவுட் செய்பவர்களும் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், தினமும் முட்டை சாப்பிடலாமா, கூடாதா என்பதில் பலருக்கும் ஒரு குழப்பம் இருக்கிறது. தினமும் முட்டை சாப்பிட்டால் சீக்கிரமே சர்க்கரை நோய் வந்துவிடுமோ என்ற பயமும் நிலவுகிறது.

24
தினமும் ஒரு முட்டை உடம்புக்கு கெடுதலா?

முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று சொல்வது முழுமையாக உண்மையும் கிடையாது; முழுமையாக பொய்யும் கிடையாது. கொலஸ்ட்ரால் பிரச்சினை அதிகமாக இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் முட்டையில் இருக்கிற கொழுப்பு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதாவது, ஏற்கனவே இதய நோய் அல்லது இதய சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கிறவர்களுக்கு முட்டை சாப்பிடுவது சில தொந்தரவுகளைக் கொடுக்கலாம்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு முட்டை சாப்பிட பலரும் விரும்புவார்கள். ஏனென்றால், முட்டை சாப்பிட்டால் ரொம்ப நேரத்திற்குப் பசி எடுக்காது. அதுமட்டுமில்லாமல், முட்டையில் புரோட்டீன், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் நிறைய உள்ளன. ஆனால், தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுவது டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்' இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

34
வேகவைத்த முட்டையை எவ்வளவு நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்?

உலக உணவு மற்றும் ஊட்டச்சத்து நிறுவனங்கள் முட்டை சாப்பிடுவதை ஊக்குவிக்கின்றன. அமெரிக்கன் டயாபடீஸ் அசோசியேஷன் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் கூட, சர்க்கரை நோய் இருக்கிறவர்களுக்கு முட்டை ஒரு சிறந்த உணவு என்று பரிந்துரைக்கின்றன. ஏனெனில், முட்டையில் புரோட்டீன் அதிகமாவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருக்கிறது.

ஆனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடும் பழக்கம் சர்க்கரை நோயை வரவழைக்கும் என்று ஒரு ஆய்வு கூறியிருப்பது முட்டை பிரியர்களுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்கள்தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

44
ஆய்வு அறிக்கை கூறுவது என்ன?

சீனாவில் உள்ள பெரியவர்களுக்கு சர்க்கரை நோய் ஆபத்து அதிகரிக்க முக்கியக் காரணம். அவர்கள் அதிகமாக முட்டை சாப்பிடுவதுதான் என்று தெரியவந்துள்ளது. சீனா மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் கத்தார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'சீனா ஹெல்த் அண்ட் நியூட்ரிஷன் சர்வே' என்ற பெயரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின்படி, தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளைச் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்து 60 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சர்க்கரை நோய்க்கும் உணவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்யும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. ஆண்களை விட பெண்களுக்கு இந்த ஆபத்து இன்னும் அதிகமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் ஆபத்து

1991 முதல் 2009 வரை, சீனாவில் முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நீண்ட காலமாக முட்டை சாப்பிடும் பழக்கம் (ஒரு நாளைக்கு 38 கிராமுக்கு மேல்) சீனப் பெரியவர்களுக்கு சர்க்கரை நோய் ஆபத்தை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. "அதுமட்டுமில்லாமல், தொடர்ந்து அதிக முட்டைகளைச் சாப்பிடும் பெரியவர்களுக்கு (50 கிராமுக்கு மேல், அல்லது ஒரு நாளைக்கு ஒரு முட்டைக்குச் சமம்) சர்க்கரை நோய் ஆபத்து 60 சதவீதம் அதிகரிக்கிறது" என்று உணவு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories