Crispy Idli Snacks: மீதமான இட்லியில் இனி உப்புமா வேண்டாம்.. மொறுமொறுப்பான இந்த ஸ்நாக்ஸ் செய்து பாருங்க!

Published : Nov 07, 2026, 03:44 PM IST

Crispy Idli Snacks: வீட்டில் மீந்துபோன இட்லியில் சுவையான மொறுமொறு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி? உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம் சேர்த்து எளிதாகத் தயாரிக்கும் இந்த ஈஸியான ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.

PREV
19
இட்லி மீந்து போனால் கவலைப்பட வேண்டாம்

காலையில் செய்த இட்லி மீந்து போய்விட்டதா? வழக்கம்போல இட்லி உப்புமா செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? அப்படியானால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்து பாருங்கள்.

வீட்டில் மீந்து போன இட்லி, உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட் என எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்தே சுவையான மொறுமொறு ஸ்நாக்ஸ் தயாரிக்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த ஸ்நாக்ஸை மாலை நேரத் தேநீருடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் தயாராகும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

29
தேவையான பொருட்கள்
  • மீந்து போன இட்லி - 5 முதல் 6
  • உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்தது)
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • கேரட் - 1 (துருவியது)
  • பச்சை மிளகாய் - 2
  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு
  • சீரகம் - 1\2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1\2 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1\4 டீஸ்பூன்
  • தனியாத்தூள் - 1\2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
39
செய்முறை - படி 1

இட்லியை உதிர்த்து வைக்கவும்

முதலில் மீந்து போன இட்லிகளை நன்றாக உதிர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.

49
படி 2

மசாலா தயாரிக்கவும்

இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், துருவிய கேரட் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

59
படி 3

மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும்

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும்.

69
படி 4

இட்லி கலவையுடன் சேர்க்கவும்

தயார் செய்த மசாலா கலவையை உதிர்த்து வைத்துள்ள இட்லி மற்றும் உருளைக்கிழங்கு கலவையுடன் சேர்க்கவும். அனைத்தும் ஒன்றாகக் கலக்கும்படி நன்றாகப் பிசையவும். இறுதியாக சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளவும்.

79
படி 5

சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்

தயார் செய்த கலவையிலிருந்து சிறிய அளவில் எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும். பின்னர் உள்ளங்கையால் லேசாக அழுத்தி சிறிய தட்டையான வடிவில் தயார் செய்து கொள்ளவும்.

89
படி 6

மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். தயார் செய்த இட்லி உருண்டைகளை வைத்து இருபுறமும் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வேகவைத்து எடுத்தால் சுவையான ஸ்நாக்ஸ் தயார்.

99
சுவையான ஸ்நாக்ஸ் கிடைக்க சில டிப்ஸ்
  • இட்லியை உதிர்க்கும்போது பெரிய கட்டிகள் இல்லாமல் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு கலவை மிகவும் தளர்வாக இருந்தால் சிறிதளவு அரிசி மாவு அல்லது கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
  • உருண்டைகளை மிகவும் தடிமனாகத் தட்டாமல் சிறிய அளவில் தட்டினால் உள்ளேயும் நன்றாக வேகும்.
  • மிதமான தீயில் பொறித்தால் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் உட்புறம் மென்மையாகவும் இருக்கும்.
  • காரம் விரும்புபவர்கள் பச்சை மிளகாயின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.


அவ்வளவுதான் இனி வீட்டில் இட்லி மீந்து போனால் கவலைப்பட வேண்டாம். வழக்கமான இட்லி உப்புமாவுக்குப் பதிலாக இந்த வித்தியாசமான மொறுமொறு இட்லி ஸ்நாக்ஸை செய்து பாருங்கள். தேங்காய் சட்னி, தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories