summer diet : கோடையில் ஆரோக்கியமாக இருக்க...இந்த தானியங்களை சாப்பிடுங்க..!!

First Published Jun 29, 2023, 8:00 PM IST

கோடையில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், சில தானியங்களை சாப்பிடுவது நல்லது.
 

சீசனுக்கு ஏற்ப உணவை மாற்றிக் கொள்வது அவசியம். நீங்கள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமாக இருக்க, சரியான உணவு மற்றும் பானங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சீசனுக்கு ஏற்ப உணவை மாற்றிக் கொள்ளாவிட்டால், நோய் வரலாம். குளிர் காலத்தில் சூடான பலன் உள்ள பொருட்களை எப்படி சாப்பிட வேண்டுமோ, அதே போல் கோடையில் ஆரோக்கியமாக இருக்க குளிர் தாக்கம் உள்ள பொருட்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளுடன், பருவத்திற்கு ஏற்ப தானியங்களிலும் மாற்றம் இருக்க வேண்டும். ஆகையால், கோடையில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க எந்த தானியங்களை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.

அமர்நாத்:
இது கோடைக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. இது தண்டுக் கீரை விதைகள் அல்லது அமர்நாத் என்று அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் தானியங்கள் போன்று இருக்கும். புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கால்சியம் ஆகியவை இதில் அதிக அளவில் காணப்படுகின்றன. கொலஸ்ட்ராலைக் குறைத்து முதுமையைத் தடுக்கிறது. இது தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

சாமை அரிசி:
சாமை அரிசியில் கால்சியம், வைட்டமின்கள், புரதம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது ஜீரணிக்க எளிதாக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் ஆனால் கலோரிகள் குறைவு. இது ஒரு கரடுமுரடான தானியம் மற்றும் செரிமானத்திற்கு நல்லது.

ராகி:
கோடைக்கால உணவிலும் ராகியை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிகவும் நல்லது. இதன் விளைவு குளிர்ச்சியாகவும், கோடை காலத்திலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

இதையும் படிங்க: இதய ஆரோக்கியத்திற்கு இந்த 4 உணகளை தினமும் சாப்பிடுங்க.. பல நன்மைகள் உண்டு!

பார்லி:
பார்லி ஒரு கரடுமுரடான தானியமாகும். மேலும் அதன் நீர் ஆயுர்வேதத்தில் சிறந்தது என்று விவரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. வீக்கத்தையும் இது நீக்குகிறது.

click me!