Health Tips: முருங்கை ஜூஸ் குடிங்க...இந்த அற்புத நன்மைகளை பெற்று கொள்ளுங்கள்..!!!

First Published | Jun 23, 2023, 11:25 AM IST

முருங்கை ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

நம்மில் பலர் கல்யாணம், பார்ட்டிகளில் அதிகம் சாப்பிடுவதை விரும்புவது உண்டு. இவ்வாறு அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவதால் அது மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் வாயு  போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனை நீங்கள் சில வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்யலாம். 

நல்ல ஆரோக்கியத்திற்கு இந்த ஜூஸை கண்டிப்பாக குடிங்க:
முருங்கை காய் நம் வீடுகளில் சமையல்களில் பயன்படுத்துகிறோம். இதை நாம் கூட்டாகவும் குழம்புகளில் சேர்த்தும் சாப்பிடுவது உண்டு. ஆனால் 
பெரும்பாலானோர் இதை சாம்பாரில் சேர்த்து சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். இது மோரிங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று நாம் அறிந்ததே. அந்தவகையில், இதன் சாறு நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்...

Latest Videos


முருங்கை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மலச்சிக்கல் நீங்கும்:
எதையும் தவறாக சாப்பிடும் பழக்கம் மலச்சிக்கலுக்கு தேவையற்ற விருந்து அளிக்கிறது. எவ்வளவு முயற்சி செய்தும் மலச்சிக்கலில் இருந்து விடுபட முடியவில்லை என்றால், வீட்டில் இருந்தபடியே முருங்கை காய் ஜூஸ் குடிப்பது நல்லது. இது வயிற்றில் உள்ள அழுக்கு மற்றும் வாயுவை முற்றிலும் சுத்தப்படுத்தும். மேலும் செரிமான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது.

சர்க்கரை நோய்:
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் எப்போதும் கவலைப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்தவகையில், எந்த ஆயுர்வேத மருந்துக்கும் குறையாத சர்க்கரையின் அளவு முருங்கைக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம் குறைவதை நீங்கள் காண்பீர்கள். மேலும் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதையும் படிங்க: கூழாங்கற்களை சமைத்து உண்ணும் சீனர்கள்... அடேய் கல்லையுமா சாப்புடுவீங்க?!

எலும்புகள் வலுவாக இருக்கும்:
முருங்கை ஜூஸ் குடிப்பதால் எலும்புகளுக்கு அபரிமிதமான பலம் கிடைக்கும் என்பது வெகு சிலருக்கே தெரியும். இன்றைய காலகட்டத்தின் தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், வித்தியாசமான வாழ்க்கை முறையாலும், நமது எலும்புகளுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், உடல் முழுவதும் பலவீனமடையத் தொடங்குகிறது. முருங்கை சாறு அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதன் காரணமாக பலவீனம் மற்றும் உடல் வலி பிரச்சனை நீங்கும்.

click me!