சாப்பிட்ட பிறகு நஞ்சாகும் 7 உணவுகள் இவைதான்... இனி உஷாரா இருங்க!!

First Published | Jun 17, 2023, 10:38 AM IST

சாப்பிட்ட பின்னர் உடல் ஆரோக்கியத்திற்கு விஷமாக மாறும் ஏழு உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

'உணவே மருந்து' என்று சொல்லப்பட்டாலும் 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதையும் நம்மால் மறுக்க முடியாது. சில உணவுகள் நமக்கு ஆரோக்கியத்தை அளித்தாலும் கூட சாப்பிட்ட பிறகு சில உணவுகள் நஞ்சாக மாறக்கூடிய அபாயமும் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு தரப்பு, 'நாள் ஒன்றுக்கு 16 லட்சம் பேர் சாப்பிட்ட பிறகு நன்றாக மாறக்கூடிய உணவு வகைகளினால் பாதிப்புக்குள்ளாவதாகவும், இதில் 5 வயது உட்பட்ட 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்க நேரிடுவதாகவும்' கூறுகிறது. 

சரியாக கழுவப்படாத காய்கறிகள்: 

பச்சை காய்கறிகளும், கீரைகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. ஆனால் இவைகளும் சில நேரங்களில் சாப்பிட்ட பின்னர் நஞ்சாக மாறும் அபாயம் உள்ளது. சில தொற்று நோய்களும் ஏற்படலாம். பச்சை காய்கறிகளில் சில சமயம் சால்மோனெல்லா, ஈகோலி, லிஸ்ட்டீரியா ஆகிய நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்புள்ளது. இது காய்கறிகளை விளைவித்த இடத்திலிருந்து நாம் வீட்டிற்கு வாங்கி வருவதற்கு இடைப்பட்ட இடங்களில் மாசுபட வாய்ப்புள்ளது அல்லது நமது வீட்டு சமையலறையில் உள்ள பிற பொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் அதன் மீது படியவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே காய்கறிகளை நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும். குறிப்பாக காய்கறிகள் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் வீரியத்தை தவிர்ப்பதற்காக அவற்றை நன்கு உப்பு கலந்த நீரில் கழுவிய பின்னரை சமைக்க பயன்படுத்த வேண்டும். 

Tap to resize

Image: Getty Images

பால் மற்றும் பால் பொருள்கள்: 

காய்ச்சாத பால், பதப்படுத்தப்படாத பால் மற்றும் அந்த பாலை கொண்டு உற்பத்தி செய்யும் பிற பொருட்கள் சில நேரங்களில் சாப்பிட்ட பின்னர் நஞ்சாக மாற வாய்ப்புள்ளது. ஏனென்றால் பச்சை பாலில் கிரிப்டோஸ்போரியம், ஈ.கோலி, கேம்பிலோபாக்டர் மாதிரியான நுண்ணுயிரிகள் உள்ளன. இவை நமக்கு தீங்கு செய்யும். பச்சை பாலில் உள்ள லிஸ்டீரியா என்ற நுண்ணுயிரி கருச்சிதைவு, முன்கூட்டியே குழந்தை பிறத்தல் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. பால் கறக்கப்படும் சூழல், அதை சேமிக்கும் பாத்திரங்கள் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பாலை நன்கு காய்ச்சிய பின்னரே குடிக்க வேண்டும். 

Image: Getty

பச்சை முட்டை:  

சால்மோனெல்லா என்ற நுண்ணுயிரி பச்சை முட்டையில்  இருக்க வாய்ப்புள்ளது. உடைக்கப்படாமல் இருக்கும் முட்டைகளில் கூட இந்த நுண்ணுயிரிகள் வாழலாம். ஆகவே தான் வேகவைத்த முட்டைகளை உண்ண நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். முட்டையை வேக வைக்கும் போது கூட அதனை முழுமையாக வேகவிட வேண்டும். அவித்த முட்டையில் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கரு ஆகியவை நன்கு கெட்டியாகும் வரை வேக வைப்பது சிறந்தது. முட்டைகளை எப்போதும் அவித்த கொஞ்ச நேரத்தில் சாப்பிட வேண்டும். 

Image: Freepik

பச்சை மீன்:  

பச்சை மீனை சமைக்கும் போது கவனமாக சமைக்க வேண்டும். இதில் பாக்டீரியா, வைரஸ்கள் இருக்க வாய்ப்புள்ளது. இவை சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோயை கூட இவை ஏற்படுத்தலாம். மீன்களை நன்கு கழுவிய பின்னரே சமைத்து சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சுத்தமில்லாத நீரில் வளர்க்கப்படும் மீன்களில் நோரோவைரஸ் எனும் கிருமி உள்ளது. ஆகவே தான் மீனுடைய பச்சை மணம் போகும் வரை அவற்றை நன்கு சுத்தம் செய்து சமைக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 

முளைகட்டிய பயிறு: 

முளைகட்டிய பயிர்களை உண்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனாலும் கூட அவை வளர்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை அவசியம். இந்த சூழலில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களும் நன்கு வளரும் வாய்ப்பு உள்ளது. நாம் பயிர் வகைகளை எவ்வளவு நேரம் முளைகட்ட வைத்திருக்கிறோம் என்பது போன்ற காரணிகளை கவனிக்க வேண்டும். முளைகட்டிய பயிர்களை எப்போதும் ரொம்ப நேரம் ஈரமாகவே வைக்கக் கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். காற்றோட்டம் குறைந்த இடத்திலும் அதை அதிக நேரம் வைக்கக்கூடாது. 

இதையும் படிங்க: உணவு மீதமாகும்போது அதை பிளாஸ்டிக் டப்பாவில் சேமிச்சு வைக்குறீங்களா? அதனால புற்றுநோய் வர வாய்ப்பிருக்காம்!!

ரொம்ப காலம் சேமிக்கும் மாவு: 

சில வீடுகளில் நீண்ட காலம் கோதுமை மாவை சேமித்து வைப்பார்கள். எப்போதாவது ஒரு தடவை தான் சப்பாத்தி போன்ற உணவு வகைகளை சமைப்பார்கள். இந்த மாதிரியான சமயங்களில் கோதுமை மாவில் மோசமான பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நாம் எந்த மாவையும் அப்படியே வைக்கக் கூடாது. நாம் தயாரிக்கும் மாவு எவ்வளவு பிரஷ்ஷாக இருக்கிறதோ அவ்வளவு நம்முடைய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறிப்பாக எந்த பழங்களையும், காய்கறிகளையும் கூட வீட்டில் நீண்ட காலம் வைக்கக் கூடாது. அவற்றில் நுண்ணுயிரிகள் வளர வாய்ப்புள்ளது. 

பச்சை இறைச்சி: 

வேக வைக்கப்படாத பச்சை இறைச்சியை சாப்பிடுவதால் உணவு நஞ்சாக மாறக்கூடிய அபாயம் அதிகம் இருக்கிறது. சமைக்கப்படாத இறைச்சியில் கேம்பிலோபாக்டர் என்ற பாக்டீரியா காணப்படுகிறது. மற்ற சில நுண்ணுயிரிகள் கூட சமைக்காத இறைச்சிகளில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே தான் பச்சை இறைச்சியை கழுவும் போது கூட கவனமாகவே செய்ய வேண்டும். அதை கழுவும் போது அந்த தண்ணீர் பிற பாத்திரங்களிலும், சுற்றியுள்ள இடங்களிலும் படாத அளவிற்கு கவனமாக கழுவ வேண்டும். சமைத்து இறைச்சியை இரண்டு மணி நேரத்திற்குள்ளாக ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். ஒருவேளை சமைக்காத பச்சை இறைச்சியை பிரிட்ஜில் சேமிக்க விரும்பினால் அவற்றை குட்டி துண்டுகளாக வெட்டியே வைக்க வேண்டும். குறிப்பாக துரித உணவுகளில் சேர்க்கப்படும் இறைச்சி நன்றாக வேகாமல் இருந்தால் அவற்றை உண்ணும் போதும் நமக்கு நன்றாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. கவனமாக உண்ணுங்கள். ஏனென்றால் சில கடைகளில் சமைக்கும் இறைச்சி அதில் உள்ள நுண்ணுயிரிகள் அழியும் வரை சமைக்கப்படுவதில்லை. அவற்றை நாம் அடிக்கடி உண்ணும் போது அவை நஞ்சாக மாறுகின்றன. ஆகவே இறைச்சியை நன்கு வேக வைத்து உண்ண வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். 

இதையும் படிங்க: இந்தக் கிழமையில் தான் மாரடைப்பு அதிகமாக வருதாம்!! எதுக்குனு காரணம் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!! ஆய்வில் பகீர் தகவல்

Latest Videos

click me!