தயிர் உடலுக்கு குளிர்ச்சினு நினைச்சிருப்பீங்க.. ஆனா 1 கிண்ணம் தயிரில் சர்க்கரை போட்டு சாப்பிட்டால் இவ்ளோ நன்மை

First Published | Jun 14, 2023, 10:44 AM IST

தயிருடன் கொஞ்சம் சர்க்கரை கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. 

இந்தியாவில் தயிர் உண்பது வழக்கமான பழக்கம். வட இந்திய பகுதிகளில் சாப்பாட்டிற்கு பின்னர் தயிர் உண்பது மரபாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணமாக நீங்கள் கர்நாடகா மாநிலம் சென்றால் அங்குள்ள உணவகங்களில் மதிய சாப்பாட்டின்போது ஒரு கிண்ணத்தில் தயிரும் சர்க்கரையும் கலந்து கொடுப்பார்கள். இப்படி உண்பதால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைப்பதுதான் அதற்கு காரணம். மோர் குடிப்பதை விடவும் தயிர் உண்பது பல நன்மைகளை கொடுக்கும். உண்மையில் தயிரும் சர்க்கரையும் கலந்து உண்ண காலை நேரம் தான் ஏற்றது. தினமும் காலை ஒரு கிண்ணம் தயிரில் சர்க்கரை போட்டு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம். 

ஊட்டச்சத்துக்கள்: 

தயிரில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ, ஈ, சி, பி2, பி12 மற்றும் கரோட்டினாய்டு ஆகிய சத்துக்கள் தயிரில் நிரம்பி காணப்படுகின்றன. ஒருவேளை நீர் அருந்தும் பழக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்தால் நாள்தோறும் காலையில் தயிருடன் சர்க்கரை கலந்து உண்ணுங்கள். உடல் நீரேற்றமாக இருக்கும். 

Tap to resize

குடலுக்கு நல்லது: 

தயிரில் சர்க்கரை சேர்த்து உண்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஏனென்றால் தயிரில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்கள் நம்முடைய வயிற்றை ஆரோக்கியமாக பராமரிக்கும். காலையில் நாம் தயிர் உண்ணும் போது அது குடலுக்கு கூடுதலாக நன்மை அளிக்கிறது. தயிர் குடல் புற்றுநோயிலிருந்து தற்காப்பு அதாய்ப்பால் அதிகமாக சுரக்க பெண்கள் பால் ரொம்ப குடிக்க வேண்டுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?ளிக்கிறது. காலையில் நாம் தயிருடன் சர்க்கரை கலந்து உண்ணும் போது நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. தயிர் எளிதில் செரிமானமாகக் கூடியது. 

சிறுநீர் பாதை தொற்று தடுப்பு: 

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை சிறுநீர் பாதை தொற்று நோய். இதனால் சிறுநீர்ப்பை, சிறுநீர் வடிக்குழாய் ஆகியவை பாதிக்கிறது. இந்த தொற்றுப் பாதித்தவர்களுக்கு சிறுநீரை வெளியேற்றும் போது கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படும். இவர்கள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிண்ணம் தயிரில் சர்க்கரை கலந்து உண்பதால் எரிச்சலுணர்வு மட்டுப்படும். தயிருக்கு சிறுநீர்ப்பையை குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆற்றல் உண்டு. 

எனர்ஜி பூஸ்டர்: 

நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும், முழுமையான ஆற்றலுடனும் இருக்க குளுக்கோஸ் நம் உடலுக்கு தேவை. இதற்கு தினமும் காலையில் ஒரு கிண்ணத்தில் தயிரும் சர்க்கரையும் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் நாள் முழுக்க உடலுக்கு தேவையான ஆற்றலை பெறுவீர்கள். 

தயிர் + சர்க்கரை கூடுதல் நன்மைகள்: 

நாள்தோறும் காலையில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உடலில் வெப்பம் குறையும். மலச்சிக்கல், செரிமான கோளாறு, அசிடிட்டி ஆகிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

கவனம்: 

சளி இருமல் ஆகிய உடல் நலப் பிரச்சினைகள் அவதிப்படுபவர்கள் தயிரை தவிர்க்கலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், நீரழிவு நோயாளிகள் தயிருடன் சர்க்கரை சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தயிருடன் சர்க்கரை உண்பதை தவிருங்கள். இது எடையை அதிகரிக்கலாம். 

இதையும் படிங்க: தாய்ப்பால் அதிகமாக சுரக்க பெண்கள் பால் ரொம்ப குடிக்க வேண்டுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Latest Videos

click me!