கோடை கால செரிமான பிரச்சனை? இந்த பானத்தை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்..!!

First Published | Jul 6, 2023, 3:09 PM IST

சிலருக்கு கோடையில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். ஆகையால் நிபுணர்களால் சொல்லப்பட்ட கோடைகால செரிமான பானத்தின் செய்முறையை அறிந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் எந்த சீசனிலும் வரலாம் ஆனால் கோடை காலம் வந்தாலே வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் மக்களுக்கு அதிகமாகும். அஜீரணம், வாயுத் தொல்லை, தலைவலி போன்ற பல பிரச்சனைகள் கோடைக்காலத்தில் ஏற்படும். இந்த நேரத்தில் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் வெப்பம் ஏற்படும். இதற்கு ஒரு காரணம், கோடை காலத்தில் நாம் எந்த உணவை உட்கொண்டாலும் அதை ஜீரணிக்க நம் உடல் கடினமாக உழைக்க வேண்டும். அதனால் தான் இந்த சீசனில் யோசித்த பிறகே உணவு முறையை தேர்வு செய்ய வேண்டும். மேலும், வயிற்றை குளிர்விக்கும் பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதன் படி, நிபுணர்கள் கூறியுள்ள கோடைகால பானம் ஒன்றை குறித்து இங்கு பார்க்கலாம். இதன் உதவியுடன் கோடையில் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். மேலும் நிபுணர்கள் கூறும் இந்த பானம் கோடையில் நமது செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்க வல்லது. இந்த பானத்தை குடிப்பதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் சிறிது நேரத்தில் மறைந்துவிடும்.

Latest Videos


இந்த பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் தண்ணீர் - 200 மி.லி
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
துளசி விதைகள் - 1 டீஸ்பூன் (ஊறவைத்தது)
குல்கந்த் -  1/2 டீஸ்பூன்

இந்த கோடைகால செரிமான பானத்தை எப்படி செய்வது?

தேங்காய் நீரில் ஏலக்காய் தூள், துளசி விதைகள், குல்கந்த் ஆகியவற்றை கலக்கவும். கரண்டியால் கிளறவும். இப்போது உங்கள் கோடைகால செரிமான பானம் ரெடி.

தேங்காய் நீரின் நன்மைகள்:
இதில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (MCTs) உள்ளன. இது குடல் அழற்சியைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதை குடிப்பதால் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. வைட்டமின் ஈ-யும் இதில் நல்ல அளவில் காணப்படுகிறது. இதை குடிப்பதால் உடல் எடை குறையும். தேங்காய் தண்ணீர் நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஏலக்காய் பொடியின் நன்மைகள்:
ஏலக்காயில் நார்ச்சத்து மிக அதிகம். இது நம் வயிற்றுக்கு நிவாரணம் தருகிறது. இது வாயுவை நீக்குவதற்கும், வயிற்று உப்புசத்தை போக்குவதற்கும் மிகவும் நல்லது.

இதையும் படிங்க: இந்த கொள்ளு பானத்தை மட்டும் குடிச்சு பாருங்க! கோடையில் புத்துணர்ச்சி தந்து கூடவே 4 நோய்களையும் விரட்டும்..!

குல்கந்தின் நன்மைகள்:
குல்கந்த் நம் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியாக செயல்படுகிறது. இது அமிலத்தன்மையைக் குறைப்பதன் மூலம் நமது செரிமானத்தை மேம்படுத்துகிறது. குடல் அழற்சியையும் குறைக்கிறது.

துளசி விதைகளின் நன்மைகள்:
துளசி விதைகள் இயற்கையான மலமிளக்கியாகும். மலச்சிக்கல் பிரச்சனையை போக்க மலமிளக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. துளசி விதைகள் மலச்சிக்கலுக்கு அருமருந்து. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்கி, காலையில் வயிறு எளிதில் சுத்தம் செய்யப்படுகிறது.

click me!