நம்மில் பெரும்பாலானோர் சாப்பிட்ட பின் உணவு மீதமாக இருந்தால் அதனை வீணாக்க நினைக்காதோர் ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் அதனை சூடு படுத்தி சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் ஆனால் சில உணவுகளை சூடு படுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது நம் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். அது என்னென்ன உணவுகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
கீரை:
இதில் அதிக அளவு நைட்ரேட்டுகள் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் இவற்றையும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது அவை நச்சுத்தன்மையுடையதாக மாறி புற்றுநோயை உண்டாக்கும் பண்புகளை வெளியிடுகிறது. மேலும் இரும்பின் ஆக்சிஜனேற்றம் ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகிறது. இது கருவுறாமை மற்றும் புற்றுநோய் உட்பட பல நோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
rice
அரிசி சாதம்:
நாம் அனைவரும் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் உணவு பொருள் இது. இதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதன் மூலம் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்படலாம். அரிசி சாதம் குளிர்ந்துவிட்டது என்று நினைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. ஏனெனில் பாக்யாக்களில் உள்ள நுண்கிருமிகள் உற்பத்தி பெருகி அழிந்து அதற்குள்ளேயே தங்க வாய்ப்பு உள்ளது. எனவே அரிசி சாதத்தை ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிட வேண்டாம்.
முட்டைகள்:
முட்டைகள் புரதத்தின் வளமான மூலமாகும். இருப்பினும், சமைத்த முட்டை அல்லது வேகவைத்த முட்டை மீண்டும் சூடாக்கி சாப்பிடும் போது, அது கடுமையான தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அதிக புரத உணவுகளில் நைட்ரஜன் நிறைய உள்ளது. இந்த நைட்ரஜன் மீண்டும் சூடுபடுத்துவதால் ஆக்சிஜனேற்றம் அடையலாம். இதனால் புற்றுநோயை உண்டாக்கலாம்.
காளான்:
இதில் அதிகளவு புரம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், இதனை சமைத்தவுடன் சாப்பிட வேண்டும். இதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது பெரியளவில் தீங்கை விளைவிக்கும்.