முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 10 பல்லு பூண்டு, காரத்துக்கு ஏற்ப 5 அல்லது 6 வரமிளகாய், ஒரு சிறிய துண்டு புளி ஆகியவற்றைச் சேர்த்து, சுத்தமாகத் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, அதே மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயம், சட்னிக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து, இதையும் தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வெங்காயத்தை அரைக்கும்போது தக்காளியை அதனுடன் சேர்த்து அரைத்துவிடக் கூடாது.
அடுத்து ஒரு வாணலியில் தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்க வேண்டும். தாளிப்பு தயாரானதும், நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பூண்டு-வெங்காய விழுதை உள்ளே சேர்த்து வதக்கத் தொடங்குங்கள். அடுப்பை மிதமான தீயிலேயே வைத்து வதக்குவது மிகவும் அவசியம். இதற்கிடையில் தனியாக இரண்டு பழுத்த தக்காளிகளை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் வதங்கிக் கொண்டிருக்கும் வெங்காய விழுதோடு இந்தத் தக்காளி விழுதையும் ஒன்றாகச் சேர்த்துக்கொள்ளவும்.