புளிச்ச கீரை...பெயர் கேட்டால் முகம் சுளியும்...ஆனா இது ஆண்களுக்கு ஆணி வேர் தெரியுமா?

First Published | Sep 6, 2023, 4:01 PM IST


கீரை என்றாலே அது சத்துதான். ஒவ்வொரு கீரையும் பல விதமான நன்மைகளை நமக்கு வழங்குகிறது. அந்த வகையில் புளிச்ச கீரையில் ஒளிந்திருக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்திலும் கூட பல்வேறு கிராமப்புறங்களில், கேழ்வரகு களி, பழைய சாதம் சாப்பிடும்போது  புளிச்சக்கீரையை அதனுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடுகின்றனர். இந்தக் கீரையை வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இது பார்வை கோளாறு, ரத்த சோகையை போன்ற பிரச்சினைகளுக்கு இந்த புளிச்ச கீரையை சாப்பிடுவது நல்லது. அது மட்டுமல்லாமல் இது பசியை தூண்டவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இப்படி சொல்லிக்கொண்டு போகும் அளவிற்கு இதில் பலவிதமான நன்மைகளுக்கு வழிவகுக்கிறது. அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.

உடல் எடை குறைக்க:
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் புளிச்சக்கீரை சாப்பிடலாம். ஏனெனில், இதில் கெட்ட கொழுப்புகளை அழிக்கும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் இது உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுத்து நிறுத்தவும், உடல் எடை அதிகமாகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
 

Latest Videos


இதயத்திற்கு: 
இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கீரை மிகவும் நல்லது. மேலும் ரத்தம் விருத்தியடைய இந்த கீரையில் மசியல் செய்து சாப்பிட்டலாம். இதில் உள்ள இரும்பு சத்தும், வைட்டமின் சி சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இந்த கீரையில் நீர்ச்சத்து நிறைந்துள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.

இதையும் படிங்க:  ஆயுர்வேதம் படி கீரையை இப்படி சமையுங்க..இனி வாத பிரச்சனை இருக்காது...!!

சளி, இருமலுக்கு நல்லது:
நீங்கள் சளி இருமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் புளிச்சக்கீரை பூக்களில் இருந்து சாறுகளை எடுத்து, அதில் இரண்டு டீஸ்பூன் மிளகு பொடி, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும். இவ்வாறு செய்தால் விரைவில் சளி இருமல் இருந்து தொல்லை நீங்கும். 

சரும பிரச்சனை:
சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உங்களுக்கு இருந்தால் இந்த கீரையை சட்னி அல்லது துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடைவீர்கள். மேலும் இந்த கீரையை விழுதாக அரைத்து, கட்டிகள், புண்கள் மீது வைத்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

ஆண்மைக்குறைபாடு நீக்கும்:
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த புளிச்சக்கீரை சாப்பிடுவதை மறக்கக்கூடாது. அதற்கு முதலில் நீங்கள், இந்த கீரையை நிழலில் நன்கு உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். பின் இவற்றுடன் ஜாதிக்காய், சுக்கு சேர்த்து இடித்து வைத்து கொள்ள வேண்டும். அதன்பின்னர், பாசி பருப்பு, மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடியாக அரைக்கவும், இவற்றுடன் புளிச்சக்கீரை பொடியையும் சேர்த்து அரை எடுத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை நீங்கள் தினமும் மதியம் சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும் என்றனர்.

கருதரிக்க:
பெண்கள் கருத்தரித்தலில் இந்த கீரையின் பங்கு வகிக்கிறது. மேலும் இது அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜன், ப்ரஜஸ்ட்ரோன் ஹார்மோன் சமநிலைப்படுத்துகிறது. இந்த கீரையில் குரோமியம் பிக்ரோலினேட் என்ற மூலப்பொருள் உள்ளதால், நீரிழிவு, உயர் ரத்தம் அழுத்தம், அதிக கொழுப்பு இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கீரை அருமருந்தாகும்.

இதையும் படிங்க: ஆண்மை அதிகரிக்க மிக சிறந்த கீரை இதுதான்...! முயற்சித்து பாருங்களேன்...!

குளிர்ச்சிக்கு:
இந்த புளிச்சக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே உடல் சூட்டை தணித்து கொள்ள விரும்புவர்களுக்கும், உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கும் இந்த கீரை மிகவும் உதவுகிறது.

click me!