'செவ்வாழை' சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா? சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்..!!

First Published | Sep 2, 2023, 3:38 PM IST

மற்ற வாழைப்பழத்தைப் போல செவ்வாழையிலும் அதிக ஊட்ட சத்துக்கள் மற்றும் நன்மைகள் நிறைந்துள்ளது. அந்தவகையில் இந்த பழத்தை எந்தெந்த நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது என்று இங்கு பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்களின் சங்கம் செவ்வாழைப்பழம் ஆகும். இதில் பொட்டசியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமிக் சி, தையமின் ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்கள் இதில் அதிகமாக இருக்கிறது.

இந்த பழத்தில் கரோட்டினாய்டுகள், ஃபிளாவனல்கள் மற்றும் அந்தோசயினின்கள் ஏராளமாக உள்ளது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் செவ்வாழைக்கு ஆக்ஸிஜனேற்ற பண்புகளை வழங்குகிறது. சொல்லப்போனால் மஞ்சள் நிற வாழைப்பழத்தை விட இந்த செவ்வாழை பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது.

Tap to resize

செவ்வாழை பழத்தின் நன்மைகள்:
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஆண்மை குறைபாடு இருந்தால் அதுவும் குணமாகும்.

நீங்கள் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு செவ்வாழை பழம் சிறந்த தீர்வாகும். குறிப்பாக உங்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடனே இந்த பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. விரைவில் உங்கள் பார்வையும்  தெளிவடையும்.

செவ்வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. மேலும் இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. 

இந்த வாழைப்பழம் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆரம்ப கால கரு சிதைவையும் தடுக்கிறது.

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம்:
இந்த பழம் சாப்பிட சரியான நேரம் காலை 6 மணி ஆகும். ஒருவேளை உங்களால் இந்நேரத்தில் சாப்பிட முடியவில்லையென்றால் பகல் 11 அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். குறிப்பாக நீங்கள் உணவு சாப்பிட்ட பின் இப்பழத்தை சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இவற்றின் முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. மேலும் இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.

Latest Videos

click me!