Walking Shoes : வெறுங்காலில் நடக்குறீங்களா? அப்ப இந்த தப்ப முதல்ல சரி பண்ணுங்க!!

Published : Jul 30, 2025, 08:46 AM IST

வெறுங்காலில் நடப்பதை விடவும் ஷூ அணிந்து நடப்பது பல வகைகளில் உடலுக்கு நன்மை தருகிறது.

PREV
15

வெறும் காலில் நடப்பது தனித்துவமான நன்மைகளை கொண்டுள்ளன. ஆனால் காயங்களை தடுக்க, எலும்புகளை பாதுகாக்க ஷூக்கள் அணிந்து நடப்பது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால் ஷூ அணிந்து நடப்பது கால்களை பாதுகாப்பதோடு, காயங்கள் ஏற்படாமலும் தடுக்கிறது. கடினமான பரப்புகளில் நடக்கும் போது ஷூ அணிய வேண்டும். இந்த பதிவில் வெறுங்காலில் நடக்கும் போது செய்யக்கூடாத ஒரு தவறு குறித்து காணலாம்.

25

நீங்கள் வாக்கிங் செல்வது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவினாலும், இந்த ஒரு தவறை செய்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நடைபயிற்சி செல்லும்போது கட்டாயமாக ஷூ அணிந்து கொள்ள வேண்டும். இது உங்களுடைய மூட்டு வலி, கால் வலி ஆகியவற்றை குறைப்பதுடன் பாதுகாப்பான பயிற்சியாக நடைபெற்ற அமையவும் முடிவு பெறுகிறது.

35

சரியான ஷூ உங்களுக்கு வளைவு ஆதரவு கொடுக்கும். அதில் உள்ள மெத்தை போன்ற வடிவமைப்பு சுளுக்கு, காயங்கள், எலும்பு முறிவுகள் ஆகிய காயங்களைத் தடுக்கும். கடினமான பரப்புகளில் நடக்கும் போது கால்களில் ஏற்படும் கூடுதல் அழுத்தத்தை குறைக்க ஷூ உதவுகிறது. இதனால் கால்களில் வலி ஏற்படுவது குறைகிறது.

45

ஷூ போட்டு கொண்டு நடப்பது சாலைகளில், பொது இடங்களில் ஏதேனும் கூர்மையான பொருள்கள் கிடந்தாலும் அந்த ஆபத்திலிருந்து உங்களை பாதுகாக்கும். தட்டையான பாதங்களைக் கொண்டவர்கள் நடக்கும்போது அதிகப்படியான அழுத்தத்தினால் வலியை சந்திக்க நேரிடும். ஷூ நடப்பது இந்த பிரச்சனையை குறைக்க உதவுகிறது.

55

கணுக்கால், முழங்கால்கள், இடுப்பு, கீழ் முதுகில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து வலியை தடுக்கும். அதிக தூரம் நடப்பவர்கள் அல்லது ஓடுபவர்கள் ஷூ அணிந்தால் அவர்களுக்கு கூடுதல் உத்வேகம் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories