ஒரு நிமிடம் முதல் 60 நிமிடங்கள் வரை!! வாக்கிங்ல ஒவ்வொரு நிமிஷத்துக்கும் வேற வேற நன்மைகளா?

Published : May 13, 2025, 08:43 AM IST

ஒரு நிமிடம் முதல் 60 நிமிடங்கள் வரை நடைபயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

PREV
17
Benefits of 1 Minute to 60 Minutes Walking

நடைப்பயிற்சி செய்வதால் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் உண்டாகும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது நாள்பட்ட நோயான இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் நடைபயிற்சி உதவுகிறது. இது நாம் அனைவரும் அறிந்ததே. நடைபயிற்சி உடல் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஒவ்வொரு காலடியும் உடலுக்கு நன்மை செய்கின்றது. இந்தப் பதிவில் வெறும் 60 வினாடிகள் தொடங்கி ஒரு முழு மணிநேரம் வரை நடப்பது வரை கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

27
ஒரு நிமிடம் முதல் 60 நிமிடங்கள் வரை!

ஒரு நிமிட நடைப்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடலில் சிறிய அளவிலான இயக்கம் கூட இரத்த சுழற்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. தசைகளுக்கும், மற்ற உறுப்புகளுக்கும் ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்களை இரத்தம் மூலம் சீராக கொண்டு செல்ல நடைபயிற்சி உதவுகிறது. ஐந்து நிமிடங்கள் நடப்பதால் இன்னும் கூடுதலான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஐந்து நிமிடங்கள் நீங்கள் நடக்கும் போது மனநிலையை சீராக்கும் எண்டோர்பின்கள் சுரக்க தொடங்குகின்றன. இது உங்களுடைய மனநிலையை மேம்படுத்துகிறது. நடைபயிற்சி முதுகு வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. 2024ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில் நடைபயிற்சி முதுகு வலியை குறைக்க கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை. தொடர்ந்து நடைபயிற்சி செய்வது முதுகு வலியின் தாக்கத்தை குறைக்கிறது.

37
15 நிமிடங்கள்

நீங்கள் 10 நிமிடங்கள் நடந்தால் உடல் மற்றும் மன அழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் பதற்றம் குறைந்து மனநிலை சீராகிறது. 15 நிமிடங்கள் நடப்பதால் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. உணவுக்குப் பின் இரத்த குளுக்கோஸ் அதிகரிப்பதை தடுக்க நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்ட பின் 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை நடக்கலாம்.

47
30 நிமிடங்கள்:

30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. உடலில் சேகரம் ஆகியுள்ள கொழுப்புச் சத்துக்களை கரைக்க, உடல் அமைப்பை மேம்படுத்த 30 நிமிடங்கள் நடைபயிற்சி உதவுகிறது. வெறும் 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயணத்தை மேற்கொள்பவர்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகளை பெறுவார்கள்.

57
45 நிமிடங்கள்:

நீங்கள் 45 நிமிடங்கள் நடக்கும்போது அதிகப்படியான சிந்தனை குறைகிறது. மனதை அமைதிபடுத்தி திரும்பத் திரும்ப வரும் ஓவர்திங்கிங் எண்ணங்களிலிருந்து விடுபட உதவுகிறது.

67
60 நிமிடங்கள்:

நீங்கள் 60 நிமிடங்கள் நடக்கும்போது உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. ஒரு மணி நேர நடைப்பயிற்சியால் மூளையின் செயல்பாடு மேம்படும். மகிழ்ச்சி ஹார்மோன் டோபமைன் சுரப்பு அதிகரிக்கிறது.

77
நடைபயிற்சி நன்மைகள்

நீங்கள் ஒவ்வொரு நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளும் போதும் அது உங்களுடைய உடலுக்கும் மனதுக்கும் நன்மைகளை செய்யக்கூடியது. அதனால் ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்தவரை நடைபயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் கண்டிப்பாக குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். 30 வயதிற்கு பிறகு ஒரு மணி நேரம் நடப்பதை வழக்கமாக வைத்திருப்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories