நடைபயிற்சி செய்வது அனைத்து வயனதிற்கும் ஏற்ற ஏரோபிக் பயிற்சியாகும். எடையை குறைக்க பலர் 10 ஆயிரம் காலடிகள் நடந்துவருகின்றனர். ஆனால் சரியான பழக்கங்களுடன் எடையை குறைக்க நினைத்தால் வெறும் 30 நிமிடங்கள் நடந்தால் போதும். இந்தப் பதிவில் உடல் எடையை வாக்கிங் மூலம் ஒரே மாதத்தில் எவ்வாறு குறைப்பது என காணலாம்.
26
எடையை குறைக்க நடைபயிற்சி
ஒரே மாதத்தில் கணிசமான அளவில் எடையை குறைக்க நடைபயிற்சியே போதுமானது தான். வெறும் ஒரு மாதம் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இடையில் ஒரு நாள் கூட நடக்காமல் இருக்கக் கூடாது. துரித உணவுகள், எண்ணெய் உணவுகள், அதிகபடியான இனிப்பு வகைகளை தவிருங்கள். உங்களுக்கு இனிப்பு சாப்பிட்டே ஆக வேண்டும் என தோன்றினால் அளவில் குறைவாக மதிய உணவுக்கு பின் உண்ணலாம். ஆனால் அதிக இனிப்பு உணவுகள், டீ, காபி உள்ளிட்டவை எடை குறைப்பு பயணத்தை தாமதமாக்கும்.
36
கிழமைக்கு ஏற்ற திட்டம்:
வாரத்தில் ஏழு நாட்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என சில டிப்ஸ் இதோ!
திங்கள் கிழமை:
முதல் நாளான திங்கள் அன்று முதலில் 10 பத்து நிமிடங்கள் மிதமான வேகத்தில் நடங்கள். இப்படி மூன்று அமர்வுகளாக 10 நிமிடங்கள் நடக்கவேண்டும். மொத்தம் 30 நிமிடங்கள் நடந்த பின்னர் முடித்து கொள்ளலாம்.
செவ்வாய் கிழமை:
முந்தைய நாள் நடந்ததற்கு எதிர்மாறாக இன்று வேகமாக நடக்க வேண்டும். 30 நிமிடங்கள் விறுவிறுப்பான பயிற்சி செய்யுங்கள்.
இன்றைய தினம் மிதமான வேகத்தில் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். ஒரு நிமிடத்தில் 150 மீ தூரத்தையாவது கடக்கும் வேகம் போதுமானது.
வியாழன் கிழமை:
இன்றைய தினம் மிதமான வேகத்தில் நடந்தால் போதுமானது. 30 நிமிடங்கள் நடந்த பின் ஓய்வெடுக்கலாம்.
வெள்ளி கிழமை:
உற்சாகமாக 30 நிமிடங்கள் நடப்பது உடல் எடையை குறைக்க உதவும். விறுவிறுப்பான நடைபயிற்சி செய்யுங்கள்.
56
சனி கிழமை:
மெதுவாக 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். இன்றைய தினம் 2 முறை நடைபயிற்சி செய்ய வேண்டும். அதாவது 30 நிமிடங்கள் ( 2 முறை) மொத்தம் 60 நிமிடங்கள் நடக்க வேண்டும். காலை, மாலை என இருவேளைகள் நடக்கலாம்.
ஞாயிறு:
ஒரு மணிநேரம் தொடர்ந்து வேகமாக நடக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு வேகமாக நடைபயிற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்களுடைய எடையை குறைக்க முடியும். உங்களால் முழுமையாக வேகமாக நடக்க முடியாவிட்டால் மெதுவாக தொடங்கி வேகமாக முடியுங்கள்.
66
முக்கியமானது எது?
தினமும் நடைபயிற்சி உடலுக்கு நல்ல உடற்செயல்பாடாக இருக்கும். ஆனால் எடையை குறைக்க நினைத்தால் அதற்கு உணவு கட்டுப்பாடும் அவசியம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் நார்ச்சத்து, புரதச்சத்து உள்ளிட்டவற்றை அதிகமாகவும், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டை குறைவாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை கொழுப்பு உணவுகளை தவிருங்கள். உங்களுடைய உடலமைப்புக்கு ஏற்றவாறு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.