வகை 2 நீரிழிவு நோய் இன்சுலின் உணர்திறனின் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. இந்த நோய் வர முக்கிய காரணமே அமர்ந்த வாழ்க்கை முறை தான். அதிகமான உடல் செயல்பாடு இல்லாதது, உள் உறுப்புகளைச் சுற்றியும், வயிற்றுப் பகுதியிலும் படிந்துள்ள கொழுப்பும் இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதற்கு வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தினமும் நடக்க வேண்டும்.
24
நடைபயிற்சி:
அந்த வகையில் விறுவிறுப்பாக நடைபயிற்சி செல்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருகிற வாய்ப்புகள் குறைவு என நிபுணர்கள் கூறுகின்றனர். அண்மையில் செய்யப்பட்ட ஒரு மதிப்பாய்வில் மணிக்கு 4 கிமீ வேகத்தில் நடப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறைவதாக கண்டறிந்துள்ளது.
34
விறுவிறுப்பான நடைபயிற்சி:
நீங்கள் தினமும் விறுவிறுப்பான நடைபயிற்சி செய்தால் உங்களுடைய இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலில் உள்ள கொழுப்பு சதவீதம் குறைகிறது. வளர்சிதை மாற்றம் அதிகரித்து எடை குறையும். இன்சுலின் உணர்திறன், தசைகளில் குளுக்கோஸ் உறிஞ்சுதல் ஆகியவை மேம்படுகிறது. மன அழுத்தம், வீக்கம் குறையவும் விறுவிறுப்பான நடைபயிற்சி செய்யலாம். தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடைபயிற்சி செய்யலாம்.
நீங்கள் முழுமையான நன்மைகளை பெற 20 முதல் 30 நிமிடங்கள் நடப்பதை பழக்கப்படுத்துங்கள். நீங்கள் நடக்கும்போது படிப்படியாக உங்களுடைய வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் முன்னேற்றம் காண்கிறது. இதய ஆரோக்கியம், தசைகளின் வலிமை, கொழுப்பு குறைப்பு போன்றவை நடைபயிற்சியின் கூடுதல் நன்மைகள். நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்ட உடனே 10 நிமிடங்கள் நடக்கலாம்.