வியர்வை வழிந்தோட இரவில் உடற்பயிற்சி செய்தால்.. உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்குமாம் தெரியுமா?

First Published | Feb 7, 2023, 6:55 PM IST

இரவில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை பயக்குமா? என்பது குறித்து முழுமையாக காணலாம். 

Image credit: Virat KohliFacebook

உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. ஆனால் காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்ய பலர் நேரம் ஒதுக்குவதில்லை. வேலைக்கு செல்வது, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதால் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் உடற்பயிற்சி அவசியம். அதனால் சிலர் இரவிலும், மாலையிலும் உடற்பயிற்சி செய்வர். இது உடலுக்கு நல்லதா? கெடுதலா? என்பதை இங்கு காணலாம். 

மற்ற வேலைகளுக்கு மத்தியில் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஜிம்மிற்கு செல்வது சிலருக்கு வாய்ப்பில்லாமல் இருக்கலாம். அதனால் மாலை, இரவு நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபவார்கள். இது நல்லதுதான். இதனால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். 

Tap to resize

Image: Getty Images

குளிர்காலத்தில் காலையில் உடற்பயிற்சி செய்யும் போது அதிகமாக மெனக்கெட வேண்டும். உடலும் இறுக்கமாக காணப்படும். இப்படி காலையில் உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் ஆற்றல் இழப்பை விட, மாலை, இரவு வேளைகளில் உடற்பயிற்சி செய்யும் போது ஆற்றல் இழப்பு குறையும். அதனால் கார்டியோ, வலிமை பயிற்சிக்கு ஏற்றதே மாலை, இரவு வேளைகள் தான். 

மாலை வேளைக்கு பிறகு நம்முடைய தசையின் உணர்திறன் அதிகமாக இருக்கும். அப்போது உடற்பயிற்சி மேற்கொண்டால் தசைகளின் வலிமை அதிகமாகும். இரவில் உடற்பயிற்சி செய்துவிட்டு உறங்கச் செல்வதால், புரதச்சத்து நன்கு உறிஞ்சப்படுகிறது. இதனால் தசைகள் உறுதியாகும். 

இரவில் உடற்பயிற்சி மேற்கொள்வதால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும். மன அழுத்தம் குறைந்து நிம்மதியாக இருந்தால் உடலை எடையை குறைப்பது விரைவாகும். அதனால் இரவு, மாலை வேளைகளில் கூட உடற்பயிற்சிகளை செய்து பலன் பெறுங்கள். ஆனால் தூங்க செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை உடற்பயிற்சி செய்வது நல்லது நினைவில் கொள்ளுங்கள். 

இரவு நேரத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் உற்சாகம் கிடைக்கும். நிம்மதியான உறக்கத்திற்கு இரவில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மாலை, இரவு நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். இரவில் உடற்பயிற்சி செய்யும் போது மனநிலையை மேம்படுத்தும். இதனால் மகிழ்ச்சி ஹார்மோன்களில் ஒன்றான எண்டோர்பின்கள் எனும் ஹார்மோன்கள் சுரப்பு அதிகமாகிறது. இதனால் மனநிலை சீராகி தெளிவான சிந்தனைகள் பிறக்கும். 

இதையும் படிங்க: தினமும் கூல்ட்ரிங்ஸ் குடிச்சா முடி கொத்து கொத்தா உதிருமாம்.. ஏன் தெரியுமா?

இதையும் படிங்க: உப்பு வைத்து பல் தேய்த்தால் வெள்ளைவெளேரென பற்கள் மாறுமா?

Latest Videos

click me!