நடிகர் ஷாருக்கானின் மகளாக இருந்தாலும், தன்னுடைய பிட்னஸால் மக்களிடையே தன் தனித்துவத்தை பதிவு செய்தவர் சுஹானா கான். இவர் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்டியா நந்தா என்பவரைக் காதலிப்பதாக தகவல் வெளியானது. இப்போது அவரது பிட்னஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
25
Image: Suhana Khan / Instagram
சுஹானா தனது உடலை மேம்படுத்த கடினமாக மெனக்கெடுகிறார். தினமும் ஜிம்மில் வியர்வை சொட்ட சொட்ட வொர்க் அவுட்களை செய்கிறாராம்.
35
சுஹானாவின் யோகா மாஸ்டர், சுஹானா கான் புதிய பயிற்சிகளை செய்வதிலும், கற்றுக்கொள்வதிலும் எப்போதும் ஆர்வமாக இருப்பாராம். யோகாசனங்களிலும் அவர் வல்லவராம். தினமும் யோகா செய்வதால் மனமும், உடலும் வலிமையாக இருக்கும்.
45
சுஹானா தன் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிட முக்கியத்துவம் கொடுக்கிறார். பருப்பு வகைகளில் செய்த உணவுகள், காய்கறிகள், சிக்கன், மீன் போன்றவை விரும்பி உண்கிறார்.
55
இவர் பாலிவுட்டில் படம் நடிக்கத் தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் தயாரான தி ஆர்ச்சீஸ் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.