Water Tips : தினமும் எவ்வளவு தண்ணீர் குடித்தால் நல்லது? தெரிந்து கொள்ளுங்கள்!

First Published | Sep 23, 2022, 7:13 AM IST

ஆயுர்வேத மருத்துவமும் தண்ணீர் குடிப்பதை பரிந்துரைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், இதற்கு சில விதிகள் உள்ளன. நாம் தண்ணீர் குடிக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விதிகளைப் பார்ப்போம்.

drink water

தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். தண்ணீர் குடிப்பதால் பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. தண்ணீர் குடிப்பதால் செரிமானத்தை ஆரோக்கியமாகவும், உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்க முடியும். ஆகவே, ஆயுர்வேத மருத்துவமும் தண்ணீர் குடிப்பதை பரிந்துரைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், இதற்கு சில விதிகள் உள்ளன. நாம் தண்ணீர் குடிக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விதிகளைப் பார்ப்போம்.

தண்ணீர் குடிக்கும் முறை

எப்போதும் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது. உட்கார்ந்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தண்ணீரை எப்போதும் மடக்மடக்கென விழுங்ககூடாது. மாறாக, சிப் பை சிப் ஆக, கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்.

வெதுவெதுப்பான நீர் அல்லது அறை வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரைக் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை குடிக்க கூடாது. குளிர்ந்த நீரானது, நம் உடலின் செரிமான ஆற்றலைக் குறைத்து விடும்.

தண்ணீரை சேமித்து வைக்க மண் பானைகள், செம்பு அல்லது ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

ஓடும் தண்ணீரை ஒருபோதும் குடிக்காதீர்கள். சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை மட்டும் குடியுங்கள்.

மேம்பட்ட செரிமானத்திற்கு, கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கவும். இது மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு அல்லது பாதி அளவு குறைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

காலையில் எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரை குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

Tap to resize

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என நினைத்து அதிகளவில் தண்ணீரை குடிக்க வேண்டாம். ஆயுர்வேதத்தின்படி தண்ணீர் கூட செரிமானம் ஆக வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் தேவைப்படும் தண்ணீரின் அளவானது மாறுபடும்.

உங்களுக்கு நன்றாக வியர்க்கவில்லை என்றால், மலச்சிக்கல், வாய் வறண்டு போனால் மற்றும் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்கள் குறைவான அளவு தண்ணீர் பருகி இருக்கலாம். எனவே அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அர்த்தம்.

தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்

உண்பதற்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது அதற்கு முன்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஊட்டச்சத்து இல்லாத வாதம் உள்ளவர், உணவுக்கு 30 நிமிடங்களுக்குப் பிறகும், அதிக எடை கொண்ட கபம் உள்ள நபர்கள் உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பும் தண்ணீர் குடிப்பது சிறந்தது.

கோடைகாலம் தவிர மற்ற அனைத்து காலங்களிலும் சீரகத்துடன் காய்ச்சப்படும் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கவும். அதனுடன் ஒரு கையளவு வெட்டிவேர் சேர்த்து குடித்தால் மிகவும் நல்லது.

Latest Videos

click me!