தினசரி காலையில் வெறும் வயிற்றில் சீரகம் மற்றும் சோம்பு கலந்த தண்ணீரை குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும். இது, உங்களுடைய செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றங்களை மிகச் சிறப்பானதாக மாற்றுகிறது.
சீரகம் மற்றும் சோம்பு கலந்த பானம் குடிப்பதால், செரிமானமும் நன்றாக இருக்கும். இது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவி செய்கிறது. உடலுக்குத் தேவையான சத்துக்களை உணவில் இருந்து பெறுகிறது. இதனால், உடலில் ஆற்றல் தக்க வைக்கப்படுகிறது. நீங்களும் உடனே இந்த அருமையான பானத்தை குடித்துப் பாருங்கள். அதற்கான பலனை உடனடியாக பெறுவீர்கள்.
உடல் உபாதைகள் வேரறுக்கும் வெந்தய குழம்பு! நாக்கில் எச்சில் ஊறும் சுவை!