தக்காளியில் உள்ள அமிலத்தன்மை, கூந்தலின் சமநிலையை சீராக்கி, கூந்தலை மென்மையாக்கி இயற்கையான பளபளப்பை அளிக்கிறது. தக்காளியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை தூண்டும். இதனால் கூந்தல் அடர்த்தியாக வளர உதவும்.
தக்காளியின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் பொடுகு தொல்லையை குறைக்கும். இதனால் அரிப்பு நீங்கி, உச்சந்தலையின் ஆரோக்கிம் மேம்படும் இதன் மூலம், கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் வலுப்பெறும்.
தக்காளியில் உள்ள நீர்ச்சத்து வறண்ட உச்சந்தலைக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, வறட்சி காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கும். தக்காளியில் உள்ள சத்துக்கள் கூந்தலுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், புத்துயிர்ப்பையும் அளிக்கும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.
தக்காளியே ஒரு இயற்கையான கண்டிஷனர் போல செயல்பட்டு, கூந்தலை மென்மையாகவும், சிக்கல் இல்லாமலும் மாற்றும். கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டில் இருந்தே கிடைக்கும் தக்காளி மாஸ்க் ஒரு பாதுகாப்பான தீர்வாகும்.