தினமும் இரவு தூங்குவதற்கு முன், முகத்தை சுத்தமாக கழுவி, சிறிதளவு ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். மேக்கப் ரிமூவராகவும் பயன்படுத்தலாம்.
ஷாம்பு போடுவதற்கு முன், தலையில் கற்றாழை ஜெல்லை தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசலாம். அல்லது ஷாம்பு போட்ட பிறகு, கண்டிஷனருக்குப் பதிலாக சிறிதளவு ஜெல்லை பயன்படுத்தலாம்.
சிறிய தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் அல்லது பூச்சிக்கடிகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு ஜெல்லை தடவலாம். இது எரிச்சலைக் குறைத்து விரைவில் குணப்படுத்த உதவும்.
வெயில் பட்டு சருமம் சிவந்து போயிருந்தால் அல்லது அரிப்பு ஏற்பட்டால், கற்றாழை ஜெல்லை தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஆண்கள் ஷேவிங் செய்வதற்கு முன், ஷேவிங் ஜெல்லுக்குப் பதிலாக கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு மிருதுவான உணர்வைத் தரும்.