முடி உதிர்தல் என்பது ஒரு பொதுவான பிரச்சினை. இந்த பிரச்சனை பலருக்கும் கவலையை அளிக்கிறது. அதுவும் ஒரு சிலருக்கு முடி கொட்டி வழுக்கையாக தெரிவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதற்காக அவர்கள் பலவிதமான எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அவற்றில் ஒன்றுதான் ஆலிவ் எண்ணெய். இந்த எண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே வழுக்கை விழுந்த இடத்தில் முடி வேகமாக வளர ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
26
மசாஜ் அவசியம் :
இந்த முறை முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தேவையான அளவு ஆலிவ் எண்ணெயை எடுத்து அதை லேசாக சூடாகி பிறகு வலுக்கை விழுந்த இடத்தில் விரல் நுலிகளால் மெதுவாக தடவி பின் பத்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி மசாஜ் செய்வதன் மூலம் வலுக்க விழுந்து இடத்தில் ரத்த ஓட்டம் தூண்டப்படும். மயிர் கால்களுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டு சென்று வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
36
தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் :
இதற்கு ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அவற்றை வழுக்கை விழுந்து இடத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு லேசான ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கவும். தேனில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆண்ட்டி பாக்டீரியல் பண்புகள் உச்சம் தலையில் இருக்கும் தொற்றை நீக்கும். இதனால் முடி ஆரோக்கியமாக வளரும்.
ஒரு ஸ்பூன் வெங்காய சாற்றில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து அதை வழுக்கை உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வெங்காய சாற்றில் இருக்கும் சல்ஃபர் முடி உதிர்வை குறைத்து, புதிதாக முடி வளருவதை தூண்டும். இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே செய்தால் போதும்.
56
முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஹேர் மாஸ்க் :
ஒரு முட்டையின் வெள்ளை கருவில் ரெண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து அதை ஹேர் மாஸ்காக போட்டு 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் புரதம், வைட்டமின்கள், பயோடின் முடி வலுப்படுத்தும் மற்றும் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
66
கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெய் :
2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் 1 ஸ்பூன் புதிய கற்றாழை ஜெல்லை கலந்து அவற்றை வழுக்கை விழுந்த இடத்தில் தடவி சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்கவும். கற்றாழை ஜெல் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
குறிப்பு : மேலே சொன்ன குறிப்புகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளரும். இது தவிர ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும் பின்பற்றுவது மிகவும் அவசியம்.