யாருக்கு தான் அழகாக இருக்க பிடிக்காது. நாம் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஆனால் நம்முடைய மோசமான வாழ்க்கை முறையால் சருமம் தான் தாக்கப்படுகிறது. இதனால் பலர் பலவிதமான சரும பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் பலர் முகம் பளபளப்பாக இருக்க கடைகளில் விற்பனையாகும் கிரீம்கள், சோப்புகள் மற்றும் ஃபேஸ் வாஷ்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றில் இருக்கும் ரசாயனம் முகத்திற்கு தீங்கு தான் விளைவிக்கும்.
28
முகத்தை பளபளப்பாக மாற்ற
இன்னும் சிலரோ பார்லருக்கு சென்று முகத்தை பளபளப்பாக மாற்றுகிறார்கள். இதுவும் நல்லதல்ல. இதனால் உங்களது பணம் தான் வீண் செலவாகிறது. ஆனால் இனி பார்லர் போகாமல், பணம் ஏதும் செலவழிக்காமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து உங்களது முகத்தை பளபளப்பாக மாற்ற முடியும் தெரியுமா? அது என்ன பொருட்கள்.. அதை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
38
1. பச்சை பால் :
முதலில் பச்சை பாலை உங்களது முகம் முழுவதும் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பச்சைப்பால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி புத்துணர்ச்சியாக வைக்க உதவும்.
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தக்காளி கூழ், 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து அதை நன்றாக கலந்து முகத்தில் தடவி மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமம் பளபளப்பாக மாறும்.
58
3. கடலை மாவு ஃபேஸ் பேக் :
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, முல்தானி மெட்டி, மஞ்சள், பச்சைப்பால் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்களது முகத்தை பிரகாசமாக மாற்றும்.
68
4. எலுமிச்சை சாறு மற்றும் தேன் :
ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு கழுவினால் முகத்தில் உள்ள கருமைகள் நீங்கும்.
78
5. கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் :
கற்றாழை ஜெல்லுடன் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும் இது உங்களது முகத்தை அழகாகவும், பொலிவாகவும் மாற்றும்.
88
6. உருளைக்கிழங்கு சாறு :
உருளைக்கிழங்கு சாற்றை ஒரு பஞ்சு உருண்டையால் முகத்தில் தடவி பத்து நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். உருளைக்கிழங்கு சாறு உங்களது முகத்தில் உள்ள முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க பெரிதும் உதவுகிறது.