வெயில் காலம் வந்தாலே கூடவே பொடுகு, முடி வறட்சி, முடி உதிர்வு, உச்சந்தலையில் அரிப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பெரியவர்களின் நிலையே இது என்றால், குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும். வெயில் காலத்தில் குழந்தைகளின் மென்மையான முடிகளில் கடுமையாக பாதிப்பு ஏற்படும். முடி உதிர்வு, வறட்சி, முடி உடைதல் போன்ற பாதிப்புகள் வரும். இதை தடுத்து குழந்தைகளின் தலைமுடியை பராமரிப்பதை குறித்து இங்கு காணலாம்.
சிக்கு! சிக்கு!
வெயில் காலத்தில் குழந்தைகளுடைய தலைமுடியில் சிக்கு, வியர்வை அதிகமாக இருக்கும். அப்போது முடியில் இருக்கும் சிக்கை மென்மையான முறையில் நீக்க முயற்சி செய்ய வேண்டும். இதற்கு மெல்லிய பற்கள் உடைய குழந்தைகளுக்கான சீப்பை உபயோகம் செய்யுங்கள். அவர்களுடைய முடியில் சிறிய சீப்பை வைத்து வாரினால் வலி உண்டாகும். கவனம்.
ஈரப்பதம்:
கோடை காலங்களில் குழந்தைகளின் தலைமுடி ஈரப்பதமாக இருக்க வேண்டும். ஏனென்றால் வறட்சியாக இருந்தால் முடி உதிர்வு அதிகரிக்கும். ஓட்ஸ், அவகேடோ ஆகிய பொருட்கள் கலந்துள்ள ஷாம்பூவை குழந்தைகளுக்கு உபயோகம் செய்யலாம். இவை பயன்படுத்தினால் குழந்தைகளின் முடி மென்மையாக ஈரப்பதமாக இருக்கும். வாரந்தோறும் இந்த மூலப்பொருள்கள் உள்ள எண்ணெய், ஷாம்பூவை பயன்படுத்தலாம்.
உணவுகள்:
தலைமுடியை பராமரிக்க குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக உணவுகளை கொடுக்க வேண்டும். வைட்டமின்கள், தாதுக்கள் காணப்படும் உணவுகள் தலைமுடியை பராமரிக்க உள்ளிருந்து ஊட்டம் கொடுக்கும். பாதாம், அக்ரூட், சியா விதைகள், பூசணி விதைகள் ஆகிய நட்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு தினமும் கொடுங்கள். நாள்தோறும் குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் உறுதிப்படுத்துங்கள். உணவும் நீரும் முக்கியம்.