உங்கள் முடி பட்டுப்போல மென்மையாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க...

First Published | May 25, 2023, 7:18 PM IST

செம்பருத்தி பூவை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் பல நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக பொடுகு, வறட்சி, முடி உதிர்தல் போன்ற அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பெரும்பாலானவர் வீட்டில் செம்பருத்தி வளர்க்கப்படுவது வழக்கம் ஏனெனில் அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். செம்பருத்தி பூவில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் பூ நம் தலையில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்க வழி வகுக்கிறது. இதனால் தலைமுடி அழகாகவும், அடர்த்தியாகவும், கருப்பாகவும் மாறும். செம்பருத்தி எப்படி முடிக்கு நன்மை பயக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். 

முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி  எண்ணெய்

செம்பருத்தி விழுதை எடுத்து தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய்களில் கொதிக்க வைக்கவும். இது முடி வளர்ச்சிக்கு உதவும். ஒரு சக்திவாய்ந்த ஹேர் ஆயிலாக இது செயல்படுகிறது. இதற்கு 8-10 செம்பருத்தி இலைகள் மற்றும் 4-5 பூக்களை எடுத்து மிருதுவாக அரைக்கவும். 100 மில்லி தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் இந்த பேஸ்ட்டை சேர்க்கவும். அதை உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இந்த செம்பருத்தி ஹேர் ஆயிலை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், முடி நன்றாக வளரும்.

Tap to resize

பொடுகு நீங்க செம்பருத்தி எவ்வாறு உதவுகிறது?

முதலில் ஒரு கப் அளவு செம்பருத்தி தேநீர் தயாரித்து ஆறவிடவும். உங்கள் தலையை சாம்பினால் கழுவிய பிறகு இந்த தேநீரை தலைமுடியில் தடவவும். பின் சிறிது நேரம் கழித்து உங்கள் தலையை கழுவவும். செம்பருத்தியில் உள்ள இயற்கை அமிலங்கள் உங்கள் உச்சந்தலை மற்றும் முடியின் pH ஐ சமப்படுத்த உதவுகிறது. இது உங்கள் தலைமுடியை மென்மையாக்குகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கும். முடியும் நன்றாக வளரும். 

இதையும் படிங்க: எலுமிச்சம் பழம் கெட்டுப் போகாமல் நீண்ட நாள் இருக்கணுமா? இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்...!!

முடி உதிர்வை கட்டுப்படுத்தும்

செம்பருத்தி சாறு மற்றும் வெங்காயச் சாறு கலந்து முடியில் தேய்த்தால் முடியின் வேர்க்கால் வலுப்பெறும். இது உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் நீளமாகவும் வளரச் செய்கிறது. முடி உதிர்தலையும் குறைக்கிறது. இதற்கு, செம்பருத்தி இலைகளின் சாற்றை வெங்காய சாறுடன் கலந்து, முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். 15-20 நிமிடங்கள் விட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும்.

பட்டு போன்ற முடி பெற

1/4 கப் உலர்ந்த செம்பருத்தி இலைகளை 1.5 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். 

சுமார் 5 நிமிடம் கொதித்த பிறகு இறக்கி விடவும். 

பின்னர் அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற ஏதேனும் உங்கள் விருப்பத்திற்கு தகுந்த என்னையே எடுத்துக் கொள்ளவும். பின்
நன்றாக கலக்கவும். 

இதழ்களை வடிகட்டி, கலவையை சுத்தமான ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். 

இதனை உலர்ந்த முடி, வேர்கள் மற்றும் முனைகளில் நேரடியாக தெளிக்கவும். 
பின் 1-2 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். 

உங்கள் தலைமுடியை ஷவர் கேப் மூலம் மூடி 1-2 மணி நேரம் வைக்கவும். 

உங்கள் தலைமுடியை வழக்கம் போல் ஷாம்பு போட்டு கண்டிஷனிங் செய்யவும். 

பாட்டிலை குளிர்சாதன பெட்டியில் வைத்து 1-2 வாரங்களுக்கு பயன்படுத்தவும். 

நல்ல பலனைப் பெற வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முடி பட்டுப்போல மென்மையாகவும், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

Latest Videos

click me!