முகத்தில் பொலிவு கிடைக்க பல மருத்துவ நன்மைகளை கொண்ட நல்லெண்ணெயை பயன்படுத்தலாம். அதனை சருமத்தில் எப்படி பயன்படுத்துவது, என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நல்லெண்ணெய்யில் லினோலிக் அமிலம்,கொழுப்பு அமிலங்களின் கலவை உள்ளது. இதனை சருமத்தில் மசாஜ் செய்தால் மென்மையான பட்டு போன்ற சருமம் கிடைக்கும். மேலும், சருமத்தில் உள்ள செல்களின் சேதமும் குறைகிறது. இந்த எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தின் மீது உபகோகம் செய்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறையும்.
பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்ட நல்லெண்ணெய்யை கொண்டு செய்யும் பேஸ் பேக் போட்டால் முகப்பருக்கள் சரியாகும். ஜொலிப்பான முகத்தோற்றம் கிடைக்கும். முகத்தில் உள்ள வடுக்கள், தழும்புகள் கூட முற்றிலும் குறையும்.
நல்லெண்ணயினை உங்கள் பாதங்களின் உள்ள வெடிப்புக்கள் பூசினால் பாதவெடிப்பு மெல்ல மறையும். குளிர்காலத்தில் இது சரும வெடிப்பினையும் சரி செய்கிறது. முகத்தில் நல்லெண்ணெய் பயன்படுத்தினால் இறந்த செல்கள் நீங்கும். முகத்தில் உள்ள மாசு சுத்தமாக நீங்கி, பொலிவான அழகான சருமம் கிடைக்கும். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?