பழங்களை சாப்பிட்டு வருவதால், நம் உடல் ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அதில் ஒரு பழம் தான் பப்பாளி. பழுத்த பப்பாளி பழத்தை, நாம் அடிக்கடி சாப்பிட்டால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஆனால், பழுக்காத பப்பாளியை உணவில் சேர்த்துக் கொண்டால், இத்தனை நன்மைகள் கிடைக்குமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு, அத்தனை நன்மைகள் நிறைந்திருக்கிறது. பழுக்காத பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் இ நிறைவாக உள்ளது. இதில் என்சைம்கள் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ் நிறைவான அளவில் நிரம்பியுள்ளது. இது உங்களை ஆரோக்கியமாகவும், மிக வலிமையாகவும் வைத்திருக்கச் செய்யும்.