ஒரு செலவு இல்லாமல் நீங்களும் கொரியன் பெண்களைப் போல அழகாக இந்த பார்முலாவை ட்ரை பண்ணுங்க..!!

Published : Oct 17, 2023, 01:32 PM ISTUpdated : Oct 17, 2023, 01:42 PM IST

அதிசய நீரான அரிசி நீர் நம் சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும் ஒரு மந்திர பொருள் ஆகும். அவற்றின் அற்புத பலன்களை குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
18
ஒரு செலவு இல்லாமல் நீங்களும் கொரியன் பெண்களைப் போல அழகாக இந்த பார்முலாவை ட்ரை பண்ணுங்க..!!

தற்போது உலகம் முழுவதும் தோல் அழகு பராமரிப்பு ட்ரெண்டுகளில் மிகவும் பிரபலம் எதுவென்றால் அது K-பியூட்டி அல்லது கொரிய தோல் பராமரிப்பு ஆகும். காரணம் அவர்கள் பயன்படுத்தும் அரிசி நீர் தான். இவை சருமத்திற்கு மட்டுமல்லாமல், கூந்தல் வளர்ச்சிக்கும் நல்ல பலன்கள் கிடைக்க உதவுகிறது. அரிசி நம்மெல்லாருடைய வீடுகளிலும் எளிதில் கிடைக்கும் என்பதால், அவற்றின் அற்புத பலன்களை குறித்து இங்கு பார்க்கலாம்.
 

28

ஹேர் கண்டிஷனர்: அரிசி நீரை ஒரு இயற்கையான ஹேர் கண்டிஷனராக பயன்படுத்தலாம். இவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் தலைமுடியில் ஷாம்பு பயன்படுத்தி பிறகு தலைமுடி மற்றும் உச்சந்தலையில் இந்த அரிசி நீரை பயன்படுத்த வேண்டும். பின்னர் உங்கள் தலையை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உங்கள் தலைமுடி மென்மையாகவும் பல பலப்பாகவும் மாறும்.

இதையும் படிங்க: "பழை சோறு" ஒளிந்திருக்கும் மருந்துவ பயன்கள்...தெரிஞ்சா இனி தூக்கி போடமாட்டீங்க...!!

38

முகத்திற்கு டோனர்: அரிசி நீரை உங்கள் சருமத்திற்கு  டோனராக பயன்படுத்தலாம். இவை உங்கள் முகத்தில் இருக்கும்  துளைகளை இறுக்கவும், முகத்திற்கு
இயற்கையான பளபளப்பை கொடுக்கவும் உதவுகிறது. இதற்கு முதலில் நீங்கள் ஒரு பருத்தி உருண்டை அல்லது காட்டன் துணியில் அரிசி தண்ணீரை நனைத்து உங்கள் முகத்தில் நன்கு தடவுங்கள். இவற்றை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் முகத்திற்கு மென்மையான க்ளென்சரைப் பயன்படுத்துவதை மறக்காதீர்கள்.

இதையும் படிங்க:  தண்ணீர் குடிக்காம இருக்க முடியுமா? ஆனா 'இந்த' உணவுகளை சாப்பிட்ட பிறகு ஒருபோதும் தண்ணீர் குடிக்காதீங்க...!!

48

முகத்தை நன்கு சுத்தப்படுத்த உதவுகிறது: அரிசி நீரானது உங்கள் முகத்தை நன்கு சுத்தப்படுத்துகிறது. மேலும் இதை முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கு உதவுகிறது. இவற்றில் இருக்கும் . இயற்கையான, மென்மையான ஃபார்முலா, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், மிருதுவாகவும், சீரானதாகவும் உணர வைக்கிறது. எனவே, நீங்கள் எப்போது பயன்படுத்தும் ஃபேஸ் வாஷ் உடன் இந்த அரிசி தண்ணீரை கலந்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.
 

58

நல்ல குளியலுக்கு: அரிசி நீரானது சருமத்தில் பல அதிசயங்களை செய்வதால் இவற்றை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். இவை சருமத்தை ஈரப்பதம் ஆக்குகிறது மற்றும் உடலில் ஏற்படும் எரிச்சலை தணிக்க உதவுகிறது. குறிப்பாக எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

68

முடி வளர்ச்சிக்கு:
முடி வளர்ச்சிக்கு அரிசி நீர் சிறந்தது. ஏனெனில் இவற்றில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்குவிக்கிறது.  அதுமட்டுமல்லாமல் இவற்றில் இனோசிட்டால் உள்ளது. இவை,  மயிர்க்கால்களை வலுப்படுத்தவும், அவை உடைவதை தடுக்கவும் உதவுகிறது. இவை உச்சந்தலையில் ஊட்டமளித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கும் அமினோ அமிலங்கள் அத்தியாவசிய புரதத்தை வழங்குவதால், அவை முடி இழைகளை சரிசெய்யவும் வலுப்படுத்தவும் உதவுகின்றது.

78

பருக்கள் நீங்க உதவுகிறது: நீங்கள் முகப்பருவல் பாதிக்கப்பட்டு இருந்தால் அதற்கான ஒரே தீர்வு அரிசி நீர் தான். ஆம்... ஏனெனில், இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை முகத்தில் இருக்கும் பருக்களை குறைக்கவும், எண்ணெய் பசையை சமநிலைப்படுத்தவும், எரிச்சல் ஊட்டும் சருமத்தை ஆற்றவும் பெரிதும் உதவுகிறது. இது மட்டுமல்லாமல் இந்நீரில் இருக்கும் மாவுச்சத்து சத்தானது ஒரு பாதுகாப்பு தடையை உருவாக்கி, முகத்தில் எண்ணெய் தேங்குவதை தடுத்து சருமத்திற்கு தெளிவான நிறத்தை கொடுக்கிறது. 

88

சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது: சூரிய ஒளியால் உங்கள் சரும்ம பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றிற்கு ஒரே தீர்வு அரிசி நீர். மேலும் பாதிக்கப்பட்ட இடத்தில் அரிசி நீரை மெதுவாக தடவ வேண்டும். இதில் இருக்கும் இயற்கையான குணப்படுத்தும் பண்புகள் விரைவில் உங்களையும் குணப்படுத்தும். இந்த நீரானது ஸ்டார்ச், வீக்கம் மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இவை உடலுக்கு தேவையான குளிர்ச்சி அமைதியான உணர்வு மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

click me!

Recommended Stories