ஒரு ரூபாய் செலவில்லாமல் வீட்டிலேயே உங்கள் நகங்களை அழகாக்கலாம்..! எப்படி தெரியுமா?

First Published | Oct 14, 2023, 3:14 PM IST

உங்கள் நகங்களை அழகாக வீட்டில் இருந்தபடியே பராமரிக்கலாம். அதற்கான எளிய வழிகள் இங்கே உள்ளன. அவை..
 

பலர் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால் சிலரோ தங்கள் நகங்களை அழகு படுத்துவதற்காக பியூட்டி பார்லர் செல்கிறார்கள். இன்னும் சிலரோ நகங்களை நீளமாக வளர்த்து அவற்றிற்கு நேரில் பாலிஷ் போடுகிறார்கள். ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததால் அவை சீக்கிரம் உடைந்து விடுகிறது.

உங்கள் நகங்களை எப்படி அலங்கரித்தாலும், முதலில் அவற்றை ஒழுங்காக பராமரிப்பது முக்கியம். சிலர் நகங்களை அலங்கரிக்கிறார்களே தவிர, அவற்றை முறையாக பராமரிப்பது இல்லை. அதன்படி, உங்கள் நகங்கள் அழகாக இருப்பதற்காக பியூட்டி பார்லர் சென்று  ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே பராமரிக்கலாம். அதற்கான எளிய வழிகள் இங்கே உள்ளன.

இதையும் படிங்க: ஆத்தாடி! இந்த நெயில் பாலிஷ் 3 Mercedes Benz காருக்கு சமமாம்..! விலை என்ன தெரியுமா?

Tap to resize

உங்கள் கைகளில் இருக்கும் அழகாக மாற்ற, முதலில் உங்கள் நகங்களிலிருந்து பழைய நெயில் பாலிஷை அகற்றவும். நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் நகங்களை நன்றாக சுத்தம் செய்யவும். அதன் பிறகு விரும்பிய வடிவில் நகங்களை வெட்டவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் ஷாம்பு சேர்த்து, சில துளிகள் எலுமிச்சை சேர்க்கவும். இரண்டு கைகளையும் அதில் மூன்று நிமிடங்கள் வைக்கவும். இது நகங்களை மென்மையாக்குகிறது.

இதையும் படிங்க:  இரவில் நகம் வெட்டக் கூடாது என்பது வெறும் மூடநம்பிக்கையா? அறிவியலா?

நகங்களுக்கு க்யூட்டிகல் கிரீம் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதால் நகங்களின் மூலையில் தேங்கியுள்ள அழுக்குகள் சுத்தமாகும். பின்னர் துணியால் நகங்களை துடைக்கவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இரண்டு கைகளிலும் ஹேண்ட் கிரீம் அல்லது மாய்ஸ்சரைசர் தடவவும். ஆனால் நகங்களில் மாய்ஸ்சரைசர் தடவாதீர்கள். மாய்ஸ்சரைசர் ஒட்டிக்கொண்டால், நெயில் பாலிஷ் நகங்களில் ஒட்டாது. முதலில் நகங்களில் வெளிப்படையான நெயில் பாலிஷை தடவவும். ஜெல் அடிப்படையிலான நெயில் பாலிஷையும் பயன்படுத்தலாம். பிறகு உங்களுக்கு பிடித்த நெயில் பாலிஷின் நிறத்தை நகங்களில் தடவவும்.

Latest Videos

click me!