ஆரோக்கிய உணவுமுறை : பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் அடங்கிய சமச்சீரான உணவை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும். ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமாக உள்ள பழங்கள், கீரைகள், நட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் சருமம் பாதிப்படைவதை தடுக்க முடியும். மேலும் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை ஊக்குவிக்க உதவும்.