முகம் அழகாக இருக்க நாம் பல வழிமுறைகளை பின்பற்றுகிறோம். ஆனால் நாம் கடைபிடிக்கும் சில குறிப்பிட்ட விஷயங்கள் முகத்திற்கு சில பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் நாம் செய்யக்கூடிய ஒன்றுதான் வேக்சிங். சில பார்லருக்கு சென்று வேக்ஸின் செய்து கொள்கிறார்கள். இன்னும் சிலரோ வீட்டிலேயே வேக்சிங் கிரீம் வாங்கி வேக்ஸ் செய்கிறார்கள். ஆனால் இப்படி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து நாம் யாரும் அறிவதில்லை. அதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
25
வேக்சிங் செய்தால் முடி திக்காக வளருமா?
நிறைய பேர் வேக்சிங் செய்த பிறகு முடி மீண்டும் வளரும்போது திக்காக வளரும் என்று நம்புகிறார்கள். பல பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. அதாவது முடியை அதன் வேர்கால்களோடு நீக்கிய பிறகு அங்கு முடியின் வளர்ச்சி இருக்காது.
35
வேக்ஸ் தேர்வு செய்யும் முறை:
பார்லருக்கு சென்றால் விதவிதமான வேக்சிங் வகைகள் இருக்கும். சாக்லேட் முதல் ப்ரூட் வரை என பல விதமான வேக்ஸ் வகைகள் அங்கு இருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால், நீங்கள் எந்த வேக்சஸ் தேர்வு செய்கிறார்களோ அவற்றின் ரிசல்ட் எல்லாமே ஒன்றாக தான் இருக்கும்.
முகத்தில் பருக்கள் இருந்தாலோ அல்லது பருக்கள் வரப்போகிறது என்றால் கட்டாயமாக வேக்ஸின் செய்யவே கூடாது.
55
எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை வேக்ஸ் செய்யலாம்?
அது ஒவ்வொருவரின் சருமத்தை பொறுத்து மாறுபடும். அதாவது உங்களுடைய சருமத்தில் முடியும் வளர்ச்சி வேகமாக இருக்கிறதா என்பதை பொறுத்து அமையும். ஆகவே, உங்களது முகத்தில் வளரும் முடியும் வளர்ச்சியை பொறுத்து நீங்கள் வேக்ஸ் செய்யுங்கள்.
குறிப்பு: முகத்தில் வேக்ஸ் செய்யும் போது கண்டிப்பாக நிபுணரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. இல்லையெனில் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்.