அரிசி மாவு ஃபேஸ் பேக்: இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில் 1 டீஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சொட்டு தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும். பின் அவற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். அரிசி மாவு முகத்தில் இருக்கும் பருக்களை நீக்கி முகத்திற்கு பளபளப்பை கொடுக்கும். எனவே, இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும்.