பொடுகு தொல்லைகள் அவதிப்படுறீங்களா? நிரந்தரமாக ஒழிக்க சூப்பரான டிப்ஸ் இதோ..!!

First Published | Sep 13, 2023, 7:01 PM IST

பொடுகு பிரச்சனை என்பது பொதுவானது. ஆனால் அதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உங்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறும். நீங்கள் பொடுகு பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால் அவற்றை நிரந்தரமாக சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
 

பொடுகு பிரச்சனை என்பது  பொதுவானது தான். ஆனால் அது அதிகமாக இருந்தால் அது உங்களுக்கு கடினமாக இருக்கும். அதிகப்படியான பொடுகு உங்கள் முடியின் வேர்களை பலவீனப்படுத்தும். பொடுகு காரணமாக நீங்கள் எந்த நேரத்திலும் சங்கடமாக உணரலாம். பொடுகு பிரச்சனையை எப்போதும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் அதன் காரணமாக வழுக்கைக்கு ஆளாக நேரிடும் என முடி நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏன் இன்னும் சொல்லப் போனால், சில நேரங்களில் பொடுகு உங்களைத் தொந்தரவு செய்யும் விதத்தில், நீங்கள் கருப்பு ஆடைகளை அணிவதில் சங்கடமாக உணர்கிறீர்கள். இதிலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். அவை என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

Tap to resize

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு: பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட, தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முடியின் வேர்களில் மெதுவாக தடவவும். பின் உங்கள் கைகளால் உச்சந்தலையை மசாஜ் செய்யவும். சுமார் 10-15 நிமிடங்கள் கழித்து ஹேர் வாஷ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொடுகு தொல்லையில் இருந்து நீங்கள் விடுபடுவது மட்டுமல்லாமல், உங்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும் மற்றும் முடி வளர உதவுகிறது.

இதையும் படிங்க:  காசே செலவு செய்யாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே பொடுகை வேறோடு அழிக்க இப்படி செய்தால் போதும்

தயிர்: தயிர் நம் வயிற்றுக்கு மட்டுமல்ல, முடிக்கும் மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் பொடுகு தொல்லைகள் அவதிப்பட்டால் கயிறை உங்கள் தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும் இதன் மூலம் பொடுகு தொல்லையில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.

வேப்பிலை: வேப்பிலையை அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது. அந்த வகையில் இது பொடுகு தொல்லையிலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலையையும் கொடுக்கும். அதற்கு முதலில் நீங்கள் வேப்பிலையை நன்கு அரைத்து தலையில் தடவி, பின் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதனை நீங்கள் வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.

கற்றாழை: கற்றாழை ஒரு இயற்கையான குளிரூட்டியாகும். மேலும் கற்றாழை ஜெல்லை நீங்கள் உங்கள் தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொடுகு தொல்லை நீங்கும்.

இதையும் படிங்க:  முடி உதிர்வு மற்றும் பொடுகு தொல்லையா? இதிலிருந்து விடுபட சிறந்த வழி இதோ..!!

இவற்றை ஒருபோதும் மறக்காதீங்க:
உங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால் நீங்கள் அதிக சர்க்கரை கொழுப்பு மற்றும் கார்ப்பரேட் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

உச்சந்தலையை அடிக்கடி சொறிய கூடாது.

வாரத்திற்கு 2 அல்லது 3 முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும்.

Latest Videos

click me!