கருத்து போன கழுத்து, கை, கால்கள் கூட.. வெறும் 5 நிமிடங்களில் வெள்ளையா மாற.. இந்த ஒரு அற்புத பொருள் போதும்..

First Published | Feb 20, 2023, 7:01 PM IST

Home Remedies for Dark Neck: உங்கள் உடலில் கருத்து போய் காணப்படும் கழுத்து உள்பட பல பகுதிகளை வெள்ளையாக மாற்ற, வீட்டு பொருள்களை வைத்தே செய்யும் எளிமையான குறிப்பை இங்கு காணலாம். 

நமது உடல் மிகவும் உணர்திறன் கொண்டது. மென்மையானது. அதனால் தான் பருவ காலங்களும், உணவு முறையும் சரும பராமரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன. வெயிலில் போனால் சருமம் கருப்பதும், குளிர்காலத்தில் தோல் வறட்சி ஆவதும் இதற்கு சான்றுகளாக உள்ளன. இப்படி கருத்த உங்கள் கழுத்துப் பகுதியை வெள்ளையாக மாற்ற எளிமையான வழி இருக்கிறது. 

உங்களுக்கு தேவைப்பட்டால், இந்த எளிய வீட்டு குறிப்பை முகம் தவிர்த்து கைமுட்டி, கால் முட்டி, அக்குள் ஆகிய கருத்து போய் கிடக்கும் மற்ற பாகங்களுக்கு பயன்படுத்தலாம். இதில் சேர்மானமாக எடுத்து கொள்ளக் கூடிய பொருட்கள் சிலரின் முகத்தில் ஒவ்வாமை எனும் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அதனால் தான் முகத்திற்கு போட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளோம். 

Tap to resize

கருத்து போன இடங்களை வெளுத்து போக செய்ய, விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். ஒன்றே ஒன்று போதும். அதை குட்டி கிண்ணத்தில் பிழிந்து ஆயிலை எடுத்து, அத்துடன் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள். இதை நன்றாக அடித்து கலக்கி கொள்ள வேண்டும். 

கிண்ணத்தில் நுரை பொங்க அடித்து வைத்திருக்கும் கலவையை எடுத்து கருத்து போன இடங்களில் பூசி கொள்ளுங்கள். கருத்து போன இடம் முழுக்க இந்த கலவையால் குளிரும்படி தேய்த்து கொள்ளுங்கள். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து எலுமிச்சை பழத் தோலைக் கொண்டு அந்த பகுதியை சுமார் 5 நிமிடமாவது நன்கு தேய்த்து விட வேண்டும். 

இதையும் படிங்க: ஒரு நாளில் முகப்பருக்கள் நீங்க.. தக்காளி இப்படி பயன்படுத்தி பண்ணி பாருங்க..

பேக் போட்டு எலுமிச்சை பழம் கொண்டு தேய்த்த பின் 15 நிமிடங்கள் ஆன பிறகு நல்ல துணியினால் அந்த இடத்தை துடைத்து விடுங்கள். பிறகு பார்த்தீர்கள் என்றால் அசந்துவிடுங்கள். கருமை நிறம் மாறியிருக்கும். 

இதையும் படிங்க: ஆன்லைன் காதல்.. உஷார்! உல்லாசமாக இருக்க நினைத்து.. வாழ்வை இழந்தவர்களின் நெஞ்சை உலுக்கும் நிஜ கதைகள்...

கழுத்தில் செயின் போட்டதால் சிலருக்கு அந்த இடம் கருத்து காணப்படும். அவர்கள் இந்த பேக்கை போட்டு வர கருமை மறைந்து பொலிவு கிடைக்கும். வாரத்தில் இருநாள் இந்த குறிப்பை செய்தால் போதும். கழுத்து, கை முட்டி, கால் என கருத்த இடங்கள் வெள்ளையாக மாறிவிடும். 

இதையும் படிங்க: பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் அதிர்ஷ்டம்.. எந்த பகுதியில் விழுந்தால் கவனமா இருக்கணும் தெரியுமா?

Latest Videos

click me!