காபி & டீ
தொப்பையை குறைக்க வேண்டுமானால், காலை உணவில் க்ரீம் மற்றும் கூடுதல் சர்க்கரை கலந்த காபியை குடிக்க வேண்டாம். காலையில் சர்க்கரையை எடுத்துக் கொண்டால், உடல் எடை அதிகரிப்பதோடு தொப்பையும் போடும். இது பல உடல்நலப் பிரச்னைகள் உருவாக காரணமாகிவிடுகிறது. சர்க்கரை உணவுகளை விட சர்க்கரை பானங்கள் மிகவும் ஆபத்தானவை என பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த பானங்களில் ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவு. காலையில் காபி குடிக்க வேண்டும் என்றால், சர்க்கரையை குறைவாக உட்கொள்ள வேண்டும் என்றும், முடிந்தால் பிளாக் காபியை அருந்த வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.