ஒரு நாளில் முகப்பருக்கள் நீங்க.. தக்காளி இப்படி பயன்படுத்தி பண்ணி பாருங்க..

First Published | Feb 17, 2023, 7:37 PM IST

தக்காளியால் உங்கள் முகத்தை பொலிவாக மாற்றமுடியும். அதன் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ளலாம். 

முகம் பளபளப்பாக இருக்க அதிகம் செலவு செய்யத் தேவையில்லை. முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகளைக் கூட இயற்கையாகவே நீக்க முடியும். அதில் தக்காளி நல்ல பலன்களைத் தரும். உணவுக்கு மட்டும் பயன்படாமல் தக்காளி உங்கள் சருமத்துக்கு கூட அழகூட்டும். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம். 

ஒரு துண்டு தக்காளியை கொண்டு பருக்களை நீக்கமுடியும். தக்காளியை ஒரு துண்டு எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவுங்கள். பின்னர் 10 நிமிடம் அப்படியே விடுங்கள். உலர்ந்த பின் கழுவி கொள்ளுங்கள். இதை அடிக்கடி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். தக்காளியில் இருக்கும் வைட்டமின் சி முகப்பருவை தடுக்க உதவுகிறது. 

Tap to resize

தக்காளி ஒரு துண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை கலந்து சருமத்தில் தேய்க்கவும். இது ஸ்க்ரப்பர் மாதிரி செயல்பட்டு முகத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும். 

தக்காளி சாறு, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசி கொள்ளுங்கள். இதனை 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலர விட்டு, பின்னர் தண்ணீரில் கழுவவும். நல்ல மாற்றம் தெரியும். 

தக்காளி, 1/2 கப் தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். இந்த கரைசலை வெயிலில் கருத்த சருமத்தில் பூசி 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். அதன் பின்னர் கழுவினால் முகம் பொலிவுறும். 

எண்ணெய் பசை இருக்கும் சருமத்தில் பொலிவு கிடைக்க.. 2 ஸ்பூன் தக்காளி சாறு, 2 ஸ்பூன் வெள்ளரி சாறு கலந்து முகத்தில் பூசி அதை 15 நிமிடங்கள் வைத்திருந்து, பின் தண்ணீரில் கழுவவும். தக்காளியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்துளைகளில் உள்ள எண்ணெயை வெளியேற்றும். இதனால் மிருதுவான, எண்ணெய் இல்லாத சருமம் கிடைக்கும். 

இதையும் படிங்க: மகா சிவராத்திரி அன்று உடலுறவு வைத்துகொள்ளலாமா? புராணம் என்ன சொல்கிறது..

இதையும் படிங்க: மகா சிவராத்திரி அன்று உங்கள் கையால் சிவனுக்கு எந்தெந்த பூக்களை வைத்து வழிபட்டால் வாழ்க்கை வளமாகும் தெரியுமா? 

Latest Videos

click me!