முகத்தின் அழகு பளிச்சிட பிளஷ் (Blush) பயன்படுத்தும் சரியான முறை: எளிய அழகு குறிப்புகள்!

Published : Jul 17, 2026, 05:48 PM IST

மேக்கப்பில் பிளஷ் (Blush) பயன்படுத்தும் விதம் உங்கள் முகத்திற்குத் தனிப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும். இயற்கையான அழகைப் பெற, சரியான பிளஷ் வகையைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதற்கான எளிய மேக்கப் டிப்ஸ் மற்றும் வழிகாட்டி இதோ!

PREV
16
பிளெண்டிங் (Blending) மிக முக்கியம்:

பிளஷ் பயன்படுத்தும்போது அது சருமத்தோடு ஒட்டாமல் தனியாகத் தெரியக்கூடாது. அதற்கு, மேக்கப் போடுவதற்கு முன்பு முகத்தை நன்றாக மாய்ஸ்சுரைசர் (Moisturizer) கொண்டு ஈரப்பதமாக்க வேண்டும். பின்னர், லேசாக பிளஷ் தடவி, சருமத்தோடு நன்றாகக் கலக்குமாறு (Blend) செய்ய வேண்டும்.

26
கன்னங்களின் சரியான பகுதி:

முகம் அழகாக செதுக்கியது போல் (Sculpted look) தோற்றமளிக்க வேண்டும் என்றால், பிளஷ்-ஐ கன்னங்களின் நடுப்பகுதியில் தடவக் கூடாது. மாறாக, கன்னங்களின் மேல் பகுதியின் ஓரங்களில் (Upper cheek ends) தடவி, அதை ஹைலைட்டருடன் சேர்த்து நன்றாக பிளெண்ட் செய்ய வேண்டும்.

36
சரும நிறத்திற்கேற்ற ஷேட்கள் :

உங்கள் சருமத்தின் நிறத்திற்குப் பொருத்தமான பிளஷ் நிறத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

Cool Undertone (குளிர்ச்சியான சரும நிறம்): இளஞ்சிவப்பு (Pink), பெர்ரி அல்லது ரோஸ் நிறங்கள் நன்றாக இருக்கும்.

Warm Undertone (வெப்பமான சரும நிறம்): பீச் (Peach) மற்றும் கோரல் (Coral) நிறங்கள் பொருத்தமாக இருக்கும்.

Neutral Effect (இயல்பான நிறம்): டஸ்டி பிங்க் அல்லது இலவங்கப்பட்டை (Cinnamon) நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

46
விரல்களால் மேக்கப் செய்தல் :

அழகு கலை நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் மேக்கப் பிரஷ்களுக்குப் பதிலாக விரல் நுனிகளைப் பயன்படுத்துகிறார்கள். பிரஷ் அல்லது ஸ்பாஞ்ச் (Sponge) சில நேரங்களில் சருமத் துளைகளை அடைத்து முகப்பருக்களை ஏற்படுத்தலாம். எனவே, கன்னங்களில் சில துளிகள் பிளஷ் வைத்து, விரல் நுனிகளால் லேசாகத் தட்டி பிளெண்ட் செய்வது பாதுகாப்பானது மற்றும் இயற்கையானது.

56
பிளங்கெட் முறை (The Blanket Method):

இயற்கையான ஒளிரும் முகப் பொலிவைப் பெற இந்த முறை உதவும். பவுண்டேஷன் (Foundation) போடுவதற்கு முன்பாகவே பிளஷ், கன்சீலர் மற்றும் ப்ரான்ஸர் ஆகியவற்றைத் முகத்தில் தடவிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, அதன் மேல் லேசான பவுண்டேஷன் லேயரைப் பூசினால், மேக்கப் திட்டுத்திட்டாகத் தெரியாமல், சருமத்தின் உள்ளிருந்து ஒரு தனி வெளிச்சம் வருவது போல முகம் பிரகாசிக்கும்.

66
சன்-கிஸ்டு லுக் (Sun-kissed Effect):

இன்றைய இளைஞர்களிடம் இந்த ட்ரெண்ட் மிகவும் பிரபலம். செர்ரி நிற பிளஷ்-ஐ எடுத்து கன்னங்கள் மற்றும் மூக்கின் பாலப் பகுதி (Bridge of the nose) முழுவதும் லேசாகத் தடவி, மேல்நோக்கி பிளெண்ட் செய்ய வேண்டும். இறுதியாக ஹைலைட்டர் கொண்டு பினிஷிங் செய்தால், வெயிலில் மின்னுவது போன்ற ஒரு அழகான, இயற்கையான லுக் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories