Hair Care Tips: முடி உதிர்வுக்கு 'டாட்டா' சொல்லுங்க.. அடர்த்தியான கூந்தலுக்கு இந்த 6 உணவுகளே போதும்!

Published : Jul 11, 2026, 07:31 PM IST

Hair Care Tips: முடி உதிர்வு பலருக்கும் தீராத பிரச்சனையாக உள்ளது. முடி உதிர்வு பிரச்சனைக்கு மாத்திரையை தேடி ஓட வேண்டாம். வீட்டில் இருக்கும் 6 உணவுப்பொருளே போதும். இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

PREV
14
முடி வளர்ச்சிக்கு உதவும் 6 சூப்பர் உணவுகள்

முடி உதிர்வு இன்று பலரும் சந்திக்கும் பொதுவான ஒரு பிரச்னையாகிவிட்டது. இதற்காக விலையுயர்ந்த சப்ளிமென்ட்களையும், ஹேர் கேர் பொருட்களையும் தேடி ஓடுவதற்கு முன்பு, நமது உடலுக்குத் தேவையான சத்துகள் உணவின் மூலம் சரியாகக் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வது மிக முக்கியம். உண்மையில், நமது சமையலறையிலேயே இதற்கான தீர்வுகள் கொட்டிக் கிடக்கின்றன. சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமே முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான வளர்ச்சியைத் தூண்ட முடியும். அப்படியான சில முக்கிய உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

இதையும் படிங்க: ஷாம்பூ தலைக்கு மட்டுமல்ல.. துணி முதல் குழாய் கறை வரை நீக்கலாம்.. இதை படிங்க!

24
முட்டை, கீரை வகைகள்

முட்டை முடி வளர்ச்சிக்குத் தேவையான இரண்டு முக்கியச் சத்துக்களைக் கொண்டுள்ளது. புரோட்டீன் மற்றும் பயோட்டின் ஆகிய இரண்டுமே இதில் நிறைந்துள்ளன. முடியின் கட்டமைப்பை உருவாக்கும் கெரட்டின் என்ற புரோட்டீனை உற்பத்தி செய்வதற்கு பயோட்டின் மிகவும் அவசியம். பசலைக் கீரை போன்ற கீரை வகைகளில் ஃபோலேட், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை அதிகமாக‌ உள்ளன. இந்தச் சத்துக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. குறிப்பாக, இரும்புச்சத்து குறைபாடு முடி உதிர்வுக்கு ஒரு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

34
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெர்ரி

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகளவில் காணப்படுகிறது. இந்த பீட்டா கரோட்டினை நமது உடல் வைட்டமின் ஏ-வாக மாற்றுகிறது. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ நேரடியாகத் தொடர்புடையது என்பதால், இதை உணவில் சேர்ப்பது நல்ல பலனைத் தரும். பெர்ரி வகை பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது முடியை வலுவாக வைத்திருக்க பெரிதும் துணைபுரிகிறது.

44
நட்ஸ், மீன்கள்

நட்ஸ் மற்றும் விதைகளில் வைட்டமின் ஈ, ஜிங்க் (துத்தநாகம்), மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. இவை முடி உதிர்வைக் குறைத்து, புதிய முடி வளர்வதைத் தூண்டுகின்றன. இவற்றை அன்றாட உணவில் சிறிதளவு சேர்த்துக்கொள்வது அவசியமாகும். இவை தவிர, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த சத்துக்களும் முடி வளர்ச்சிக்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே மாத்திரைகளைத் தேடி ஓடுவதை விட்டு விட்டு மேற்கண்ட இந்த உணவினை தொடர்ந்து சாப்பிட்டு உங்களின் முடி வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories